வாலாஜாபேட்டை நகராட்சியில் 15 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும். ஊழியர்கள் தில்லுமுல்லுகளை கண்டறிந்து அவர்களை களையெடுக்கும் பணியில் நகராட்சி கமிஷனர் தீவிரம் காட்டி வருகிறார். இது ஊழியர்கள் மத்தியில் நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாலாஜாபேட்டை நகராட்சி கமிஷனர் பொறுப்புக்கு பலரும் வரத்தயங்கிய நிலையில் கடந்த ஜூன்22ல் குமரி மன்னன் பொறுப்பேற்றார். ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத அளவுக்கு நகராட்சி நிதி நெருக்கடியில் இருந்தது. 

அதனைத்தொடர்ந்து தீவிர வரிவசூலில் கமிஷனர் கவனம் செலுத்தினார். இதனால் வரிவசூலில் கடைசி இடத்திலிருந்த வாலாஜா நகராட்சி முதலிடம் பிடித்தது. இதனால் ஊழியர்களுக்கு மாதந்தோறும் சம்பளம் சிக்கலின்றி கிடைத்து வருகிறது.

இந்நிலையில், ஊழியர்களின் சேமநல நிதியில் ஏற்பட்ட முறைகேடு குறித்து கமிஷனரின் கவனத்துக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து அது தொடர்பான கோப்புகளை அவர் ஆய்வு செய்தார். குடிநீர் இணைப்பு முறைகேடு தொடர் பாகவும் விசாரணை நடத்தி வருகிறார்.

இதற்கிடையே, பல்வேறு புகாரில் சிக்கிய நகராட்சி ஊழியர் ஒருவர் வேறு நகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதனால் 'கருப்பு ஆடு' ஊழியர்கள் மத்தியில் கிலி ஏற்பட்டுள்ளது.