ஜப்பான் நாட்டு அரசின் தொழில் துறை அமைச்சக அதிகாரிகளுடன் அமைச்சர் ஆர்.காந்தி வெள்ளிக்கிழமை சந்தித்துப்பேசினர்.

முதல்வர் மு.க.ஸ்டாலினின்


இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

ஆணைக்கிணங்க, டோக்கியோவில் நடைபெற்ற பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சக அதிகாரிகளுடன், கைத்தறி-துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி வெள்ளிக்கிழமை சந்தித்து பேச்சு நடத்தினார். 

அப்போது, ஜப்பான் நாட்டு ஜவுளி நிறுவனங்கள், தமிழகத்தில் உள்ள ஜவுளி நிறுவனங்களில் முதலீடு செய்யுமாறு அமைச்சர் காந்தி கோரிக்கை விடுத்தார். மேலும் நவம்பர் மாதம் சென்னையில் நடைபெற உள்ள சர்வதேச தொழில்நுட்ப ஜவுளிக் கண்காட்சியில் கலந்து கொள்ளவும் அவர் அழைப்பு விடுத்தார்.
இந்தச்சந்திப்பின் போது, கைத்தறி-கைத்திறன் அரசு முதன்மைச் செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், ஆணையர் வள்ளலார், அணைக்கட்டு எம் எல்ஏ ஏ.பி.நந்தகுமார் மற்றும் துறைச் சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.