தீபாவளிப் பண்டிகையையொட்டி, சுமங்கலி பெண்கள் கேதார கவுரி நோன்பு இருந்து கோயி லுக்கு சென்று வழிபடுவது வழக்கம். அதன்படி, சோளிங்கர் சோழபுரீஸ்வரர் கோயிலில் கேதார கவுரி நோன்பு விழா நடைபெற்றது.

திரளான பக்தர்கள் தரிசனம்


இதையொட்டி மூலவர் சோழபுரீஸ்வரர் மற்றும் கனக குசாம்பாள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மீனாட்சி-சுந்தரேஸ்வரர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அதே போல் கோயில் வளாகத்தில் ரிஷப வாகனத்தில் சோமாஸ்கந்தர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

உற்சவர் சன்னதியில் கேதார கவுரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் அளித்தார்.

இதில் சோளிங்கர் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள், வெற்றிலை, பாக்கு, பழங்கள், நோன்பு கயிறு, பலகாரங்களை வைத்து, அம்மனுக்கு சிறப்புப் பூஜை செய்தனர்.