குறள் : 919

வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்
பூரியர்கள் ஆழும் அளறு.

மு.வ உரை :

ஒழுக்க வரையரை இல்லாத பொது மகளிரின் மெல்லிய தோள் உயர்வில்லாத கீழ்மக்கள் ஆழ்ந்து கிடக்கின்ற நரகமாகும்.

கலைஞர் உரை :

விலைமகளை விரும்பி அவள் பின்னால் போவதற்கும் ஹஹநரகம்'' எனச் சொல்லப்படும் சகதியில் விழுவதற்கும் வேறுபாடே இல்லை

சாலமன் பாப்பையா உரை :

வேறுபாடு கருதாது பொருள் தருவார் எவரையும் தழுவும் பாலியல் தொழிலாளரின் மெல்லிய தோள்கள், அறிவற்ற கீழ்மக்கள் புகுந்து மூழ்கும் நரகம் ஆகும்.

Kural 919

Varaivilaa Maanizhaiyaar Mendhol Puraiyilaap
Pooriyarkal Aazhum Alaru

Explanation :

The delicate shoulders of prostitutes with excellent jewels are a hell into which are plunged the ignorant base

Horoscope Today: Astrological prediction for October 31 2022


இன்றைய ராசிப்பலன் - 31.10.2022 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam


31-10-2022, ஐப்பசி 14, திங்கட்கிழமை, சப்தமி திதி பின்இரவு 01.12 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. உத்திராடம் நட்சத்திரம் பின்இரவு 04.15 வரை பின்பு திருவோணம். மரணயோகம் பின்இரவு 04.15 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். 

இராகு காலம் | Indraya Raagu Kalam 


காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.

இன்றைய ராசிப்பலன் - 31.10.2022 | Today rasi palan - 31.10.2022


மேஷம்

இன்று உங்களுக்கு பெரியவர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். கடன் பிரச்சினைகள் தீரும். வருமானம் பெருகும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு தேவையில்லாத மன உளைச்சல் ஏற்படும். எதிலும் நிம்மதியில்லாத நிலை தோன்றும். வர வேண்டிய தொகை கைக்கு கிடைப்பதில் கால தாமதமா-கும். உங்கள் ராசிக்கு பகல் 11.23 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை.

மிதுனம்

இன்று பகல் 11.23 மணி முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் மந்த நிலை ஏற்படும். குடும்பத்தில் வீண் செலவுகள் செய்ய நேரிடும். அலுவலகத்தில் மேலதிகாரிகளிடம் வீண் வாக்கு வாதங்களை தவிர்க்கவும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. 

கடகம்

இன்று குடும்பத்தில் எதிர்பாராத பணவரவு உண்டாகும். பிள்ளைகள் வழியில் சுப செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் இருந்த மன சங்கடங்கள் மறையும். கூட்டாளிகளின் ஆலோசனைகளால் தொழில் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடன்பிறப்புகள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும். வருமானம் பெருகும்.

கன்னி

இன்று உங்களுக்கு உடல் சோர்வும் மனக்குழப்பமும் அதிகரிக்கும். குடும்பத்தில் பெரியவர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு சற்று குறையும்.

துலாம்

இன்று நீங்கள் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. பிள்ளைகளால் குடும்பத்தில் அமைதி குறையும். ஆடம்பர பொருட்களால் செலவுகள் அதிகரிக்கும். வியாபார ரீதியாக எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் சற்று நிதானத்துடன் இருப்பது நல்லது.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கும். வேலையில் உடனிருப்பவர்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும்.

தனுசு

இன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். வேலையில் பொறுப்புடன் நடந்து கொள்வதன் மூலம் உங்களின் மதிப்பு உயரும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. எதிர்பாராத உதவி கிட்டும்.

மகரம்

இன்று நீங்கள் வேலையில் புது பொலிவுடனும், தெம்புடனும் செயல்படுவீர்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் உங்கள் பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன் கிடைக்கும்.

கும்பம்

இன்று உங்களுக்கு உத்தியோக ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகளால் நிம்மதி குறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழிலில் உள்ள போட்டி பொறாமைகள் குறையும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.

மீனம்

இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் பெண்களால் சந்தோஷம் உண்டாகும். தொழிலில் இதுவரை இருந்த பிரச்சினைகள் நீங்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.





கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001