குறள் : 918

ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப
மாய மகளிர் முயக்கு.

மு.வ உரை :

வஞ்சம் நிறைந்த பொதுமகளிரின் சேர்க்கை ஆராய்ந்தறியும் அறிவு இல்லாதவற்க்கு அணங்கு தாக்கு(மோகினி மயக்கு) என்று கூறுவர்.

கலைஞர் உரை :

வஞ்சக எண்ணங்கொண்ட ஹஹபொதுமகள்'' ஒருத்தியிடம் மயங்குவதை அறிவில்லாதவனுக்கு ஏற்பட்ட ஹஹமோகினி மயக்கம்'' என்று கூறுவார்கள்

சாலமன் பாப்பையா உரை :

வஞ்சிப்பதில் வல்ல பாலியல் தொழிலாளரின் தழுவலை, வஞ்சனையைக் கண்டு அறியும் அறிவற்றவர், காமம் ஊட்டி உயிர் கவரும் தெய்வத்தின் தாக்குதல் என்பர்.

Kural 918

Aayum Arivinar Allaarkku Anangenpa
Maaya Makalir Muyakku

Explanation :

The wise say that to such as are destitute of discerning sense the embraces of faithless women are (as ruinous as those of) the celestail female.

Horoscope Today: Astrological prediction for October 30 2022


இன்றைய ராசிப்பலன் - 30.10.2022 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam30-10-2022, ஐப்பசி 13, ஞாயிற்றுக்கிழமை, சஷ்டி திதி பின்இரவு 03.28 வரை பின்பு வளர்பிறை சப்தமி. மூலம் நட்சத்திரம் காலை 07.25 வரை பின்பு பூராடம் நட்சத்திரம் பின்இரவு 05.47 வரை பின்பு உத்திராடம். அமிர்தயோகம் காலை 07.25 வரை பின்பு சித்தயோகம் பின்இரவு 05.47 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. கந்த சஷ்டி விரதம். சூரசம்ஹாரம். முருக வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். 

இராகு காலம் | Indraya Raagu Kalam 

மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00. 

இன்றைய ராசிப்பலன் - 30.10.2022 | Today rasi palan - 30.10.2022

மேஷம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் ஆர்வம் குறைந்து காணப்படும். வியாபார வளர்ச்சிக்காக எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உறவினர்களை அனுசரித்து சென்றால் ஆதரவாக இருப்பார்கள். தெய்வீக காரியங்களில் ஈடுபடுவது நல்லது.

ரிஷபம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் கால தாமதம் ஏற்படும். தொழில் ரீதியாக புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பணியில் கவனம் தேவை.

மிதுனம்

இன்று வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் இருந்த தடைகள் நீங்கி சாதகப் பலன் கிட்டும்.

கடகம்

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் அனுகூலமான பலனை தரும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமை பலப்படும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். கடன் பிரச்சினைகள் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.

சிம்மம்

இன்று வியாபாரத்தில் சில நெருக்கடிகள் ஏற்படலாம். புதிய பொருட்கள் வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். எதிர்பாராத பணவரவு கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

கன்னி

இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சற்று மந்தமாக இருக்கும். பிள்ளைகள் வழியில் மருத்துவ செலவுகள் ஏற்படும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. வியாபார ரீதியான பயணங்களில் வெளிவட்டார நட்பு உண்டாகும். எடுக்கும் முயற்சிகளுக்கு உறவினர்கள் வழியில் உதவிகள் கிட்டும்.

துலாம்

இன்று உங்களுக்கு இருந்த ஆரோக்கிய பாதிப்புகள் விலகி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பிள்ளைகளால் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும். சிந்தித்து செயல்பட்டால் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை காணலாம்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். பிள்ளைகளால் மன சங்கடங்கள் உண்டாகும். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய மாற்றங்களால் வியாபாரத்தில் முன்னேற்றம் அடையலாம்.

தனுசு

இன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்ல வாய்ப்பு உண்டாகும். வியாபார ரீதியாக வெளி வட்டார நட்பு கிடைக்கும். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும்.

மகரம்

இன்று உறவினர்களால் குடும்பத்தில் ஒற்றுமை குறையலாம். உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை ஏற்படும். செலவுகளை குறைப்பதன் மூலம் நெருக்கடிகளை தவிர்க்கலாம். மன உறுதியோடு பிரச்சினைகளை எதிர் கொள்வீர்கள். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது.

கும்பம்

இன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுகபடுத்தி லாபம் அடைவீர்கள். குடும்பத்தில் பெரியவர்களின் அன்பை பெறுவீர்கள். உடல் நலம் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். 

மீனம்

இன்று பணவரவு அமோகமாக இருக்கும். சிலருக்கு புதிய பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிடைக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்புடன் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். சுபகாரிய முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும்.
கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001