குறள் : 914

பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்
ஆயும் அறிவி னவர்.

மு.வ உரை :

பொருள் ஒன்றையே பொருளாகக் கொண்ட பொது மகளிரின் புன்மையான இன்பத்தை அருளாகிய சிறந்த பொருளை ஆராயும் அறிவுடையோர் பொருந்த மாட்டார்.

கலைஞர் உரை :

அருளை விரும்பி ஆராய்ந்திடும் அறிவுடையவர்கள் பொருளை மட்டுமே விரும்பும் விலைமகளிரின் இன்பத்தை இழிவானதாகக் கருதுவார்கள்

சாலமன் பாப்பையா உரை :

அருளோடுகூடப் பொருள்தேடும் அறிவினை உடையவர், வெறும் பொருளையே தேடும் பாலியல் தொழிலாளரின் அற்ப உடம்பைத் தீண்டமாட்டார்.

Kural 914

Porutporulaar Punnalan Thoyaar Arutporul
Aayum Arivi Navar

Explanation :

The wise who seek the wealth of grace will not desire the base favours of those who regard wealth (and not pleasure) as (their) riches.


Horoscope Today: Astrological prediction for October 26 2022




இன்றைய ராசிப்பலன் - 26.10.2022 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam


26-10-2022, ஐப்பசி 09, புதன்கிழமை, பிரதமை திதி பகல் 02.42 வரை பின்பு வளர்பிறை துதியை. சுவாதி நட்சத்திரம் பகல் 01.24 வரை பின்பு விசாகம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 0. சந்திர தரிசனம். லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். கந்த சஷ்டி விரதம் ஆரம்பம். 

இராகு காலம் | Indraya Raagu Kalam

மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00 

இன்றைய ராசிப்பலன் - 26.10.2022 | Today rasi palan - 26.10.2022


மேஷம்

இன்று எந்த ஒரு செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உடன் பிறந்தவர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும். வியாபாரத்தில் வருமானம் பெருகும். கடன் பிரச்சினைகள் தீரும்.

ரிஷபம்

இன்று பணவரவு தாராளமாக இருக்கும். திருமண முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். 

மிதுனம்

இன்று நீங்கள் நினைத்த காரியத்தை செய்ய முடியாமல் சில இடையூறுகள் ஏற்படலாம். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமை பலப்படும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.

கடகம்

இன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். உறவினர்களால் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். சிக்கனமாக செயல்பட்டால் கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். எந்த ஒரு விஷயத்திலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்பட்டால் அனுகூலப் பலனை அடையலாம்.

சிம்மம்

இன்று பிள்ளைகளால் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும்.

கன்னி

இன்று பணவரவு சுமாராக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும்.

துலாம்

இன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் விலகும். உடல் ஆரோக்கியம் சீராகும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபார வளர்ச்சிக்காக எதிர்பார்த்த வங்கி கடன் கிட்டும்.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் பல இடையூறுகள் ஏற்படலாம். எந்த ஒரு விஷயத்திலும் போராடி வெற்றி பெறுவீர்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் இருக்கும் பிரச்சினைகளை சமாளிப்பீர்கள். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.

தனுசு

இன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். பிள்ளைகளால் சுபசெலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும். தொழிலில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். சேமிப்பு உயரும்.

மகரம்

இன்று உடன் பிறந்தவர்கள் வாயிலாக சுப செய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் ஆர்வத்துடன் படிப்பார்கள். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். வேலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். வியாபாரம் சிறப்பாக இருக்கும்.

கும்பம்

இன்று பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்படலாம். பொறுமையை கடைபிடிப்பதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். மனைவி வழி உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும்.

மீனம்

இன்று நீங்கள் மன உளைச்சலுடன் காணப்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம்.



கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001