குறள் : 912
பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்
நயன்தூக்கி நள்ளா விடல்.
மு.வ உரை :
கிடைக்க கூடிய பயனை அளந்து பார்த்து அதற்கு ஏற்றவாறு இனிய சொல் கூறுகின்ற பண்பற்ற பொது மகளிரின் இன்பத்தை ஆராய்ந்து பொருந்தாமல் விட வேண்டும்.
கலைஞர் உரை :
ஆதாயத்தைக் கணக்கிட்டு அதற்கேற்றவாறு பாகுமொழிபேசும் பொதுமகளிர் உறவை ஒருபோதும் நம்பி ஏமாறக்கூடாது
சாலமன் பாப்பையா உரை :
ஒருவனிடம் உள்ள செல்வத்தை அடையும்வரை நல்லவராய்ப் பேசும், பண்பு இல்லாத பாலியல் தொழிலாளரின் ஒழுக்கத்தை நன்கு எண்ணி, அவரைச் சேராது விடுக.
Kural 912
Payandhookkip Panpuraikkum Panpin Makalir
Nayandhookki Nallaa Vital
Explanation :
One must ascertain the character of the ill natured women who after ascertaining the wealth (of a man) speak (as if they
were) good natured ones and avoid intercourse (with them).
Horoscope Today: Astrological prediction for October 24 2022
இன்றைய ராசிப்பலன் - 24.10.2022 | Indraya Nalla Neram | Indraya Panchangam
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
24-10-2022, ஐப்பசி 07, திங்கட்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி மாலை 05.27 வரை பின்பு அமாவாசை. அஸ்தம் நட்சத்திரம் பகல் 02.42 வரை பின்பு சித்திரை. சித்தயோகம் பகல் 02.42 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 0. தீபாவளிப் பண்டிகை. போதாயன அமாவாசை. லக்ஷ்மி குபேர பூஜை.
இராகு காலம் | Indraya Raagu Kalam
காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.
இன்றைய ராசிப்பலன் - 24.10.2022 | Today rasi palan - 24.10.2022
மேஷம்
இன்று வியாபாரத்தில் அமோகமான லாபம் கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு உற்றார் உறவினர்கள் வாயிலாக செலவுகள் ஏற்படலாம். சேமிப்பு சிறிது கரையும். வியாபார ரீதியாக எதிர்பார்த்திருந்த பண உதவிகள் கிடைக்கும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.
மிதுனம்
இன்று குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஒற்றுமை இருக்கும். உறவினர்களிடம் பேச்சில் நிதானம் தேவை. சிந்தித்து செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் பெரிய இழப்பை தவிர்க்கலாம். உடன் பிறந்தவர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
கடகம்
இன்று உறவினர்கள் வருகையால் வீட்டில் சுப நிகழ்வுகள் நடைப்பெறும். குடும்பத்தில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். பழைய கடன்கள் தீரும். புதிய நபரின் அறிமுகத்தால் வியாபாரத்தில் பல மாற்றங்கள் உண்டாகும். பெண்களுக்கு வேலைபளு குறையும்.
சிம்மம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். குடும்பத்தினரிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகள் சற்று குறையும். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.
கன்னி
இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இருக்கும். நண்பர்களின் சந்திப்பில் சந்தோஷம் கூடும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வியாபார முன்னேற்றத்திற்கான உழைப்புகள் அனைத்திற்கும் நற்பலன் கிட்டும்.
துலாம்
இன்று பணவரவு சுமாராக இருக்கும். வரவை விட செலவுகள் அதிகமாக இருக்கும். தேவைகள் நிறைவேற கடன் வாங்க நேரிடும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் லாபம் உண்டாகும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். தெய்வ வழிபாடு நன்மை தரும்.
விருச்சிகம்
இன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும். பெரியவர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் குறையும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். பணவரவு சிறப்பாக இருக்கும். பொன் பொருள் சேரும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை அளிக்கும்.
தனுசு
இன்று எந்த காரியத்தையும் சுறுசுறுப்புடனும் உற்சாகத்துடனும் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் பிள்ளைகள் அன்புடன் நடந்து கொள்வார்கள். புதிய சலுகைகளை அறிமுகம் செய்து வியாபாரத்தில் வெற்றி காண்பீர்கள். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். சுபகாரியங்கள் கைகூடும்.
மகரம்
இன்று குடும்பத்தில் பணவரவு தாராளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். பிள்ளைகள் வழியில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஓத்துழைப்பு கிட்டும்.
கும்பம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையில்லாத டென்ஷன் ஆரோக்கிய குறைவு ஏற்படும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையும். வியாபாரம் தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களில் அலைச்சலுக்கு பிறகே லாபம் கிடைக்கும். எதிலும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
மீனம்
இன்று நீங்கள் எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். கடன் பிரச்சினைகள் தீரும். வருமானம் இரட்டிப்பாக பெருகும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001