குறள் : 905
இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல்.
மு.வ உரை :
மனைவிக்கு அஞ்சி வாழ்கின்றவன் எப்போதும் நல்லவர்க்கு நன்மையான கடமையைச் செய்வதற்கு அஞ்சி நடப்பான்.
கலைஞர் உரை :
எப்போதுமே நல்லோர்க்கு நன்மை செய்வதில் தவறு ஏற்பட்டுவிடக் கூடாதே என்று அஞ்சுகிறவன் தவறு நேராமல் கண்காணிக்கும் மனைவிக்கு அஞ்சி நடப்பான்
சாலமன் பாப்பையா உரை :
தன் மனைவிக்குப் பயப்படுபவன் நல்லார்க்கும் கூட நல்லது செய்ய எப்போதும் அஞ்சுவான்.
Kural 905
Illaalai Anjuvaan Anjumar Regngnaandrum
Nallaarkku Nalla Seyal
Explanation :
He that fears his wife will always be afraid of doing good deeds (even) to the good.
Horoscope Today: Astrological prediction for October 17 2022
இன்றைய ராசிப்பலன் - 17.10.2022 | Indraya Nalla Neram | Indraya Panchangam
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
17-10-2022, புரட்டாசி 30, திங்கட்கிழமை, சப்தமி திதி காலை 09.30 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. புனர்பூசம் நட்சத்திரம் பின்இரவு 05.12 வரை பின்பு பூசம். அமிர்தயோகம் பின்இரவு 05.12 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. பைரவர் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் | Indraya Raagu Kalam
காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.
இன்றைய ராசிப்பலன் - 17.10.2022 | Today rasi palan - 17.10.2022
மேஷம்
இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மனம் மகிழும் மாற்றங்கள் உண்டாகும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். பணவரவு பலவழிகளில் வரும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு பிள்ளைகளால் அலைச்சல் அதிகரிக்கும். வேலையில் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.
மிதுனம்
இன்று குடும்பத்தில் திடீரென்று சுபசெய்திகள் வந்து சேரும். சகோதர, சகோதரிகள் நட்புடன் இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த பிரச்சினைகள் தீரும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதில் சந்தோஷம் இருக்கும்.
கடகம்
இன்று குடும்பத்தில் உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் விரோதத்திற்கு ஆளாக நேரிடும். அலுவலகத்தில் எதிர்பாராத விதமாக வீண் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களின் ஆதரவு கிட்டும்.
சிம்மம்
இன்று உங்களுக்கு பண வரவு சிறப்பாக இருக்கும். பொருளாதார ரீதியான பிரச்சினைகள் குறையும். பிள்ளைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் ரீதியாக எதிர்பார்த்த வங்கி கடன்கள் கிடைக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய பொருட்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும்.
கன்னி
இன்று நீங்கள் புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்ற நிலை உண்டாகும். கூட்டாளிகளின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும்.
துலாம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படும். குடும்பத்தில் பெரியவர்களுடன் மன ஸ்தாபங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் கோபத்தை குறைத்துக் கொண்டு பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் லாபத்தை அடைய முடியும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு வீண் குழப்பங்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை.
தனுசு
இன்று நீங்கள் எந்த செயலையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். கடன் பிரச்சினைகள் தீரும்.
மகரம்
இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடித்து வெற்றி அடைவீர்கள். குடும்பத்தில் உற்றார் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைகேற்ப புதிய வாய்ப்புகள் கிட்டும். தொழிலில் இருந்த போட்டி பொறாமை குறைந்து முன்னேற்றம் ஏற்படும்.
கும்பம்
இன்று உங்களுக்கு தொழில் வியாபார ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும். எடுக்கும் புதிய முயற்சிகளில் சிறு இடையூறுகள் உண்டாகும். குடும்பத்தில் செலவுகள் குறையும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வேலையில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் கிட்டும்.
மீனம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாரா£க இருக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. வேலையில் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.