ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி, பனப்பாக்கம், அசநெல்லிக்குப்பம், புன்னை, கீழ்வீதி, ரெட்டிவலம், வேட்டாங்குளம், அகவலம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 3 மணியில் இருந்து 5 மணி வரை 2 மணிநேரம் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

இதனால் பள்ளியில் இருந்து வீட்டுக்கு சென்ற மாணவர்கள் பெரிதும் சிரமத்துக்கு உள்ளாகினர்.

இந்த கனமழையால் வயல்வெளிகள் மற்றும் ரோடுகளில் தண்ணீர் தேங்கி குளம் போல காட்சியளித்தது. மாலை நேரத்தில் பெய்த மழையால் ரோட்டில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படி மெதுவாக ஊர்ந்து சென்றன.