வாலாஜாபேட்டை ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் பௌர்ணமி சிறப்பு பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, கந்தர்வ ராஜ ஹோமம், சுயம்வர கலா பார்வதி ஹோமம், சந்தான கோபால யாகம், 27 நட்சத்திர சாந்தி ஹோமம்,ராகு-கேது தோஷங்கள் நீங்க பூஜை, அன்னாபிஷேகம், முனீஸ்வரர் அனுக்கிரஹம் வேண்டி சிறப்பு ஹோமம் மற்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
மாலை ராகு காலத்தில் ஸ்ரீசரபேஸ்வரர் யாகம் மற்றும் சிறப்பு அபிஷேக பூஜை, சிவலிங்க ரூபத்தில் உள்ள 468 சித்தர்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
முன்னதாக, அன்னதானம் நடைபெற்றது. பூஜையில் பங்கேற்ற பக்தர்களுக்கு பீடாதிபதி ஸ்ரீமுரளிதர சுவாமிகள் பிரசாதம் மற்றும் ஆசி வழங்கினார்.