தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடிக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.

காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

இதனை மீறுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் தடையை மீறி பட்டாசு வெடித்ததாக 12 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.