ஆற்காடு அருகே மின்சாரம் பாய்ந்து கணவன் - மனைவி சனிக்கிழமை உயிரிழந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த பெரிய குக்குண்டி, செய்யாறு சாலையில் வசித்து வந்தவர் சரவணன் (50). விவசாயி. இவரது மனைவி சாந்தி (45). தம்பதிக்கு இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

இந்த நிலையில், கண்வன்-மனைவி இருவரும் சனிக்கிழமை காலை விவசாய வேலைக்காக தங்களின் நிலத்துக்குச் சென்றனர். அங்கு, நிலத்தின் அருகே உள்ள மின் கம்பத்திலிருந்த கம்பி அறுந்து கீழே விழுந்துள்ளது.

இதைக் கவனிக்காமல் மின் கம்பியின் மீது சரவணன் கால் வைத்துள்ளார். இதில், மின்சாரம் பாய்ந்து அவர் கீழே விழுந்துள்ளார்.

அவரைக் காப்பாற்ற சாந்தி முயன்றதில் அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில், கணவன் மனைவி இருவரும் நிகழ்விடத் திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து ஆற்காடு கிராமிய போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.