நீரிழிவு நோயால் பாதிக்கப் பட்டவர்கள் உட்கொள்வதற்கு ஏற்ற நட்ஸ் வகைகளுள் பிஸ்தா சிறந்தது.
அவற்றுள் ஆரோக்கியமான கொழுப்பும், புரதமும், நார்ச்சத்தும் நிறைந்துள்ளன. இவை ரத்தத்தில் சர்க்கரை அளவு உயராமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
முக்கியமாக பிஸ்தாவில் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாக இருப்பதால் ரத்த சர்க்கரை அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. பசி உணர்வை கட்டுப்படுத்தி நீண்ட நேரம் சோர்வின்றி உணர வைக்கும். அதனால் பிஸ்தா, நீரிழிவு நோய்க்கு ஏற்ற நட்ஸ் வகையாக கருதப்படுகிறது.
அதே வேளையில் அதனை சரியான அளவில் உட்கொண்டால்தான் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும். அதன் கிளை செமிக் குறியீடு 15-க்குள் இருக்க வேண்டும். 50 கிராம் வரை தினமும் பிஸ்தா உட்கொள்ளலாம். நீரிழிவு நோயாளிகள் உப்பு சேர்க்கப்பட்டிருக்கும் பிஸ்தாவை சாப்பிடக்கூடாது.
நீரிழிவு நோயாளிகள் மட்டு மல்ல, மற்றவர்களும் பிஸ்தா சாப்பிடுவது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும்.