ஆற்காடு பெரிய தண்டு காரன் வீதியில் வசித்து வந்த வில்லாளன்(48). ஆட்டோ உரிமையாளர். இவர் நேற்று காலை அவரைக்கரைக்கு சவாரி ஏற்றிக்கொண்டு வந்து இறக்கியுள்ளர்.
பிறகு அங்கிருந்து எம் பிடி சாலைக்கு வந்து சிப்காட் வழியாக ஆற்காடு நோக்கி சென்றார். சிப்காட் ஜி.கே.ஆஸ்பத்திரி அருகே நின்றுகொண்டிருந்த தனியார் பஸ்ஸின் பின்பக்கம் ஆட்டோ மோதிவிட்டது.
இதில் தலையில் காய மடைந்த அவர் வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் உயர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மாலை 6 மணியளவில், சிகிச்சை பலனின்றி இறந்தார்.
விபத்து குறித்து சிப்காட் எஸ்ஐ தாசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.