முன்னாள் குடியரசுத்தலைவர், மறைந்த டாக்டர் அப்துல் கலாமின் 91வது பிறந்த நாள் மற்றும் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு கனவு மாரத்தான் போட்டி, வாலாஜா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர் பாண்டியன் தலைமை தாங்கினார். எஸ்பி தீபா சத்யன, திமுக மாநில சுற்றுச்சூழல் துணைச் செயலாளர் வினோத்காந்தி உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர்.

வாலாஜா ஸ்போர்ட்ஸ் கிளப் செயலாளர் அப்துல்கரீம் வரவேற்றார். நிகழ்ச்சியில் அமைச்சர் காந்தி கலந்து கொண்டு கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்குபெற்று ஓடினர்கள். 16 வயது உள்ளிட்வர் களுக்கு 11 கிலோமீட்டர் தூரமும், அதேபோல் 17 வயது கடந்தவர்களுக்கு 21 கிலோமீட்டர் தூரம் வரை ஓடவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
வாலாஜா, அம்மூர் முத்துக்கடை, வீசிமோட்டுர் வழியாக ஓடி மீண்டும் வாலாஜா அரசுபள்ளி வந்தடைந்தனர். தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளித்து கெலெக்டர் பாஸ்கரபாண்டியன் பேசியதாவது; இந்தமாவட்டத்தில் விளையாட்டிற்கு முக்கியத்துவம் கொடுப்பது வரவேற்கதக்கதாகும். திருமூலர் கூற்றுப்படி உடல் வளர்த்தேன் என்பது நல்ல திடகாத்திரமான உடலை பேணிகாப்பது ஆகும். இதற்காக ஓடுவது. சைக்கிள் ஓட்டுவது. நடைபயிற்சி உள்ளிட்டவைகள் மேற்க்கொள்ளவேண்டும். இதில் தினந்தோறும் ஓடிபழுகுவதால் உள்ளமும் உடலும் வலுப்பெறும்.

மேலும் இதயம் ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளுக்கு வழிவகுக்கும். போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கும் வெற்றி பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் பேசினார். இதில் 16 வயதுக்கு உட்பட்ட போட்டியில் முதல் மூன்று இடங்களை பெற்ற செல் வேந்திரன், யுவன்சங்கர் மற்றும் குருமூர்த்தி அதே போல்7வயது முதல் 40 வய துவரை உள்ள போட்டியில் வெற்றிபெற்ற நிகில்குமார், ட்ரய்குமார், ரிங்குசிங் ஆகியோருக்கும் 41 வயது முதல்60 வயதுவரை உள்ள போட்டியடியில் நயினாமணி, வேணுகோபால், கஜபதி உள்ளிட்டவருக்கும் மகளிர் பிரிவில் IIவயது முதல் 16 வயது வரை பிரிவில் முதல் மூன்று இடங்களை பிடித்த நிரஞ்சனாராஜி ஹஸ்விதா, ஹேமந்த்சைனி ஆகியோருக்கு ரொக்க பரிசும், மற்றும் சான்றிதழ் ஆகியவற்றை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினர்.