A government bus crashed into an electric pole on Walajapet's Solinger Road
வாலாஜாபேட்டை சோளிங்கர் ரோட்டில் சாய்பாபா கோயில் அருகே அரசு பஸ் மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
நேற்று மாலை திருத்தணிக்கு சென்ற அரசு பஸ் எதிரே வேகமாக வந்த தனியார் பஸ்சுக்கு வழி விட்டு இடது புறமாக ஒதுங்கியது.
அப்போது சாலையில் இருந்த பள்ளத்தில் எதிர் பாராத விதமாக டயர்கள் இறங்கி அங்கிருந்த உயர் அழுத்த மின் கம்பத்தில் மோதியது.
உடனடியாக மின் இணைப்பு துண்டிக் கப்பட்டதால் உயிர் சேதம் இன்றி பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.