ஆற்காடு பாலாற்றங்கரையில் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற பெருந்தேவிதாயார் சமேத வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது.

இந்த கோயிலில் புரட்டாசி மாதம் வரும் அனைத்து சனிக்கிழமை களிலும் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம்.

அதன் படி நேற்று முன்தினம் புரட்டாசி 4ம் சனிக்கிழமையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. அதனைத் தொடர்ந்து பெருந்தேவி தாயார் சமேதராக ஸ்ரீவரதராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு கோவிந்தா முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

அதனைத் தொடர்ந்து இரவு சிறப்பு அலங்காரத்தில் மங்கள வாத்தியம் முழங்க திருவீதி உலா வந்து வரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.