Swami Balamurugan blessed in special decoration on the occasion of Krithikai in Ratnagiri temple Arcot.
ஆற்காடு அடுத்த ரத்தினகிரியில் பிரசித்தி பெற்ற பாலமுருகன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் நேற்று புரட்டாசி மாத கிருத்திகையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில் ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் கலந்து கொண்டு சிறப்பு பூஜை செய்தார்.
இதையடுத்து வெள்ளி வேல் மற்றும் சேவல் கொடியுடன் வெள்ளி அங்கி அணிந்து சிறப்பு அலங்காரத்தில் வள்ளி தெய்வானை சமேதராக சுவாமி பாலமுருகன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அரோகரா என பக்தி முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது.