ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கரபாண் டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வேலை வாய்ப்பு பிரிவு இணையதளத்தின் மூலமாக 2011ம் ஆண்டு முதல் 10,12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களது மதிப்பெண் சான்றிதழ் நிகழ்நிலையாக அவரவர் பயின்ற பள்ளிகளிலேயே பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்நிலையில், 2021 2022ம் கல்வி ஆண்டு முதல் அவரவர் பள்ளிகளில் வேலை வாய்ப்பு துறையால் கைவிடப்பட்டது. எனவே, பள்ளி மாணவர்கள் தங்களது வேலைவாய்ப்பு பதிவினை வேலை வாய்ப்பு இணையதளமான https://tnvelaivaaippu. gov.in/Empower அல்லது இ-சேவை மூலமாகவோக அல்லது நேரடியாகவோக பதிவு செய்து கொள்ளலாம்' என அதில் கூறப்பட்டிருந்தது.