கலவை அடுத்த கலவை புத்தூர் கிராமத்தில் சிதம்பரேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கலவை அடுத்த கலவை புத்தூர் கிராமத்தில் உள்ள சிவகாமி உடனுறை சிதம்பரேஸ்வரர் கோயிலில் அருணாச்சலம் சுவாமிகள் தலைமையில் சிதம்பரேஸ்வரருக்கு பால், தயிர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான மூலிகை கலந்த திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து, சிதம்பரேஸ்வரருக்கு ருத்ராட்ச மாலையுடன் அலங்காரம் செய்து கற்பூர தீபாராதனை காட்டப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.