Special Yagam at Prathiyangara Devi Temple on the occasion of Ashtami
ஆற்காடு அடுத்த விளாப்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட நாராயணபுரம் அருங்குன்றம் சாலையில் ப்ரத்தியங்கரா தேவி- சரபேஸ்வரர் கோயில் உள்ளது.
இந்த கோயிலில் நேற்று தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு சிறப்பு யாகம் நடந்தது. அப்போது, யாக குண்டத்தில் மங்கள பொருட்கள் போடப்பட்டு வேத மந்திரங்கள் ஓதப்பட்டது.
முன்னதாக, கோ பூஜை, கலச ஸ்தாபனம், கணபதி பூஜை, சகல தேவதா ஆவாகனம் ஆகியன நடந்தன.
மாங்கல்யம் பலம் பெறவும், புத்திர பாக்கியம் பெறவும் அம்மன் அருள் வேண்டி நடந்த இந்த சிறப்பு யாகம் முன்னிட்டு ப்ரத்தியங்கரா தேவிசிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.