சூரிய கிரகணம் நேற்று மாலை வெளிப்பட்டது. இதன் எதிரொலியாக வாலாஜாவில் மாலை திறக்க வேண்டிய கோயில்கள் சற்று தாமதமாக திறகப்பட்டது.

இதற்கிடையே இங்குள்ள காகிதகார தெருவில் வசிக்கும் கங்காகுமரன் என்பவர் கிரகணம் தொடங்கியவுடனே தனது வீட்டு வாசலில் உலக்கையை தரையில் நிற்க வைத்தார். எவ்வித பிடிப்பும் இல்லாமல் அப்படியே நின்றது. 

இது கிட்டதட்ட முடிவு பெறும் கிரகணம் வரை நின்றது. இதனை அப்பகுதியில் உள்ள மக்கள் பார்த்து பரவசமடைந்தனர்.