குறள் : 910
எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும்
பெண்சேர்ந்தாம் பேதைமை இல்.
மு.வ உரை :
நன்றாக எண்ணுதல் பொருந்திய நெஞ்சத்தோடு தக்க நிலையும் உடையார்க்கு எக்காலத்திலும் மனைவியின் ஏவலுக்கு இணங்கும் அறியாமை இல்லை.
கலைஞர் உரை :
சிந்திக்கும் ஆற்றலும் நெஞ்சுறுதியும் கொண்டவர்கள் காமாந்தகாரர்களாகப் பெண்களையே சுற்றிக் கொண்டு கிடக்க மாட்டார்கள்
சாலமன் பாப்பையா உரை :
சிந்திக்கும் மனமும் செல்வமும் உடையவர்களிடம் மனைவி சொல்லை மட்டுமே கேட்டுச் செய்யும் அறியாமை ஒருபோதும் இராது.
Kural 910
Enserndha Nenjath Thitanutaiyaarkku Egngnaandrum
Penserndhaam Pedhaimai Il
Explanation :
The foolishness that results from devotion to a wife will never be found in those who possess a reflecting mind and a prosperity (flowing) therefrom.
Horoscope Today: Astrological prediction for October 22 2022
இன்றைய ராசிப்பலன் - 22.10.2022 | Indraya Nalla Neram | Indraya Panchangam
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
22-10-2022, ஐப்பசி 05, சனிக்கிழமை, துவாதசி திதி மாலை 06.03 வரை பின்பு தேய்பிறை திரியோதசி. பூரம் நட்சத்திரம் பகல் 01.50 வரை பின்பு உத்திரம். சித்தயோகம் பகல் 01.50 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. சனி பிரதோஷம். சிவ வழிபாடு நல்லது.
இராகு காலம் | Indraya Raagu Kalam
காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
இன்றைய ராசிப்பலன் - 22.10.2022 | Today rasi palan - 22.10.2022
மேஷம்
இன்று உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். வீட்டில் பிள்ளைகளால் மன சங்கடங்கள் ஏற்படலாம். அலுவலகத்தில் தேவையற்ற இடமாற்றம் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உறவினர்களால் அனுகூலங்கள் உண்டாகும்.
ரிஷபம்
இன்று தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் பிள்ளைகளால் அமைதியற்ற சூழ்நிலை நிலவும். எந்த செயலையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே வெற்றி அடைய முடியும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். தெய்வ வழிபாடு நன்மை தரும்.
மிதுனம்
இன்று புது உற்சாகத்துடன் அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
கடகம்
இன்று உடன் இருப்பவர்களுடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். பொருளாதார ரீதியாகவும் நெருக்கடிகள் ஏற்படலாம். தொழில் வளர்ச்சிக்கான செயல்களில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் சிறு தாமதத்திற்கு பின் கிட்டும்.
சிம்மம்
இன்று குடும்பத்தில் செலவுகள் குறைந்து காணப்படும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். கடன் பிரச்சினை குறையும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த உயர்வுகள் கிடைக்கும்.
கன்னி
இன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் குறையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் அடைவதில் சிக்கல்கள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் ஆதரவு மனதிற்கு நிம்மதியை தரும். உத்தியோக ரீதியான பயணங்களில் நற்பலன் கிட்டும்.
துலாம்
இன்று வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு ஆனந்தத்தை தரும். தொழில் வியாபாரத்தில் பணியாட்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். எதிர்பார்த்த லாபம் கிட்டும். வெளியூரிலிருந்து நற்செய்தி கிடைப்பதற்கான சூழ்நிலை உருவாகும். புதிய பொருள் சேரும்.
விருச்சிகம்
இன்று எதிர்பாராத வகையில் திடீர் தனவரவு உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடும். வியாபாரத்தில் எதிரிகளால் இருந்த பிரச்சினைகள் விலகும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் முன்னேற்றம் ஏற்படும். கொடுத்த கடன்கள் வசூலாகும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
தனுசு
இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சற்று சுமாராக இருக்கும். பிள்ளைகள் வழியில் சுப செலவுகள் ஏற்படும். சேமிப்பு சற்று குறையும். தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்த வங்கி கடன்கள் கிடைக்கும். சொத்து சம்பந்தமான பேச்சு வார்த்தைகளில் இழுபறி நிலை உண்டாகும்.
மகரம்
இன்று உங்களுக்கு மன உளைச்சல் ஏற்படும். மற்றவர்கள் மீது கோபப்படும் நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடுவதை தவிர்க்கவும். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. எதிலும் கவனம் தேவை.
கும்பம்
இன்று குடும்பத்தில் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.
மீனம்
இன்று எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வேலையில் சக நண்பர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001