குறள் : 904

மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்
வினையாண்மை வீறெய்த லின்று.

மு.வ உரை :

தன் மனைவிக்குப் பயந்து நடக்கும் மறுமைப் பயன் இல்லாதவனின் செயல்திறம் நல்லவரால் பாராட்டப்படாது.

கலைஞர் உரை :

மணம் புரிந்து புதுவாழ்வின் பயனை அடையாமல் குடும்பம் நடத்த அஞ்சுகின்றவனின் செயலாற்றல் சிறப்பாக அமைவதில்லை

சாலமன் பாப்பையா உரை :

தன் மனைவிக்குப் பயந்து நடக்கும் மறுமைப் பயன் இல்லாதவனின் செயல்திறம் நல்லவரால் பாராட்டப்படாது.

Kural 904

Manaiyaalai Anjum Marumaiyi Laalan
Vinaiyaanmai Veereydha Lindru

Explanation :

The undertaking of one who fears his wife and is therefore destitute of (bliss) will never be applauded.

Horoscope Today: Astrological prediction for October 16 2022



இன்றைய ராசிப்பலன் - 16.10.2022 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam



16-10-2022, புரட்டாசி 29, ஞாயிற்றுக்கிழமை, சஷ்டி திதி காலை 07.04 வரை பின்பு தேய்பிறை சப்தமி. திருவாதிரை நட்சத்திரம் பின்இரவு 02.14 வரை பின்பு புனர்பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1/2. கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். 

இராகு காலம் | Indraya Raagu Kalam

மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00. 

இன்றைய ராசிப்பலன் - 16.10.2022 | Today rasi palan - 16.10.2022


மேஷம்

இன்று பிள்ளைகளால் பெருமை அடையப் போகிறீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுப காரியங்கள் கைகூடும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். அனுபவம் உள்ளவர்களின் அறிவுரையால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடை, ஆபரணம் வாங்கும் எண்ணம் நிறைவேறும்.

ரிஷபம்

இன்று குடும்பத்தில் வீண் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். உறவினர்களிடம் மாறுபட்ட கருத்துகள் தோன்றும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்ககூடும். உடனிருப்பவரை அனுசரித்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகமாகும்.

மிதுனம்

இன்று உடன் பிறந்தவர்களிடையே ஒற்றுமை அதிகமாகும். வீட்டில் சுப பேச்சுக்கள் நற்பலனை தரும். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வருமானம் இரட்டிப்பாகும். கடன்கள் குறையும். எடுக்கும் புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும்.

கடகம்

இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளின் உதவியால் நல்ல லாபம் கிடைக்கும். மற்றவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். எந்த வேலையிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கான திட்டங்கள் எளிதில் நிறைவேறும். சேமிக்கும் அளவிற்கு வருமானம் பெருகும்.

சிம்மம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சி நடைபெறும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். உடன் பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பெண்கள் சிக்கனமாக செயல்படுவார்கள். புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.

கன்னி

இன்று பணவரவு அமோகமாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் குறைவில்லாமல் இருக்கும். பிள்ளைகள் எதிலும் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். கொடுத்த கடன் கைக்கு வந்து சேரும்.

துலாம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற சூழ்நிலை நிலவும். உறவினர்களுடன் மனக்கசப்பு ஏற்படும். உடலில் வலிகள் வந்து நீங்கும். சேமிப்பு குறையும். மதி நுட்பத்துடன் செயல்பட்டால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நண்பர்கள் உங்கள் தேவை அறிந்து உதவுவார்கள. சுபகாரியங்கள் கைகூடும்.

விருச்சிகம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மனக்குழப்பம் ஏற்படும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடாமல் இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் போது நிதானம் தேவை. சுபகாரியங்களை தவிர்க்கவும்.

தனுசு

இன்று எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள். தொழில் வளர்ச்சிக்காக எதிர்ப்பார்த்த கடன் கிடைக்கும். பெண்களுக்கு வீட்டில் பணிச்சுமை குறையும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும்.

மகரம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வீட்டில் பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிட்டும். பூர்வீக சொத்துகள் வழியில் அனுகூலம் உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உடல் பாதிப்புகள் குறையும். பிள்ளைகள் விரும்பியதை வாங்கி மகிழ்வார்கள்.

கும்பம்

குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் தோன்றும். உற்றார் உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மனநிம்மதி குறையும். எந்த விஷயத்திலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி அனுகூலப்பலன் உண்டாகும்.

மீனம்

இன்று பிள்ளைகளால் சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளால் வீண் விரயங்கள் உண்டாகும். அயராத உழைப்பால் எடுக்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். பொறுப்புடன் செயல்பட்டால் வியாபாரத்தில் இழப்புகளை தவிர்க்கலாம். உறவினர்கள் கை கொடுத்து உதவுவார்கள்.


கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001