குறள் : 896

எரியாற் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்

பெரியார்ப் பிழைத்தொழுகு வார்


மு.வ உரை :

தீயால் சுடப்பட்டாலும் ஒருகால் உயிர் பிழைத்து வாழ முடியும் ஆற்றல் மிகுந்த பெரியவரிடத்தில் தவறு செய்து நடப்பவர் தப்பி பிழைக்க முடியாது.


கலைஞர் உரை :

நெருப்புச் சூழ்ந்து சுட்டாலும்கூட ஒருவர் பிழைத்துக் கொள்ள முடியும்; ஆனால் ஆற்றல் மிகுந்த பெரியோரிடம் தவறிழைப்போர் தப்பிப் பிழைப்பது முடியாது


சாலமன் பாப்பையா உரை :

தீயால் சுடப்பட்டாலும் பிழைத்துக் கொள்ளலாம். ஆனால் பெரியவர்களை அவமதித்து வாழ்பவர் பிழைக்கவேமாட்டார்.


Kural 896

Eriyaal Sutappatinum Uyvuntaam Uyyaar

Periyaarp Pizhaiththozhuku Vaar


Explanation :

Though burnt by a fire (from a forest) one may perhaps live; (but) never will he live who has shown disrespect to the great (devotees).


Horoscope Today: Astrological prediction for October 08 2022


இன்றைய ராசிப்பலன் - 08.10.2022 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam


08-10-2022, புரட்டாசி 21, சனிக்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி பின்இரவு 03.42 வரை பின்பு பௌர்ணமி. பூரட்டாதி நட்சத்திரம் மாலை 05.08 வரை பின்பு உத்திரட்டாதி. மரணயோகம் மாலை 05.08 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. ஸ்ரீ நடராஜர் அபிஷேகம். லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். 

இராகு காலம் | Indraya Raagu Kalam

காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

இன்றைய ராசிப்பலன் - 08.10.2022 | Today rasi palan - 08.10.2022


மேஷம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் பெருமைபடும்படி நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வியாபாரத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் சுமூகமாக முடியும். கடன்கள் குறையும்.

ரிஷபம்

இன்று உங்கள் இல்லம் தேடி ஆனந்தமான செய்தி வந்து சேரும். உறவினர்களால் உதவி கிடைக்கும். பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். சேமிப்பு உயரும்.

மிதுனம்

இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். எடுக்கும் முயற்சிகளுக்கு நண்பர்களின் ஓத்துழைப்பு கிட்டும். தொழில் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் அனுகூலம் உண்டாகும். எதிலும் கவனம் தேவை.

கடகம்

இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு பகல் 11.27 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் அமைதியாக இருப்பது நல்லது. ஆரோக்கிய ரீதியாக இருந்த பிரச்சினைகள் படிப்படியாக குறையும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட காலதாமதமாகும். தேவையில்லாத அலைச்சல்கள் உண்டாகும். உங்கள் ராசிக்கு பகல் 11.27 க்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் கவனம் தேவை. மற்றவர்கள் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம்.

கன்னி

இன்று பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் விஷயங்கள் நடைபெறும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார ரீதியான வெளிவட்டார நட்பு கிட்டும்.

துலாம்

இன்று உற்றார் உறவினர்களால் குடும்பத்தில் ஒற்றுமை குறைவு ஏற்படும். உடல் ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு பாதிப்புகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும். பணவரவு ஓரளவு சிறப்பாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.

விருச்சிகம்

இன்று நீங்கள் எடுக்கும் காரியங்களில் வெற்றி பெற அருகில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் சற்று செலவுகளும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது.

தனுசு

இன்று எந்த செயலையும் துணிச்சலோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தினரின் அன்பும் ஆதரவும் கிட்டும். தொழில் ரீதியான வெளியூர் பயணங்களில் சாதகப்பலன் உண்டாகும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். கடன் பிரச்சினை தீரும்.

மகரம்

இன்று உங்களுக்கு உத்தியோக ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். எடுக்கும் முயற்சிகளில் நிதானமாக செயல்பட்டால் அனுகூலம் கிட்டும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் நற்பலன்கள் கிடைக்கும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும்.

கும்பம்

இன்று தொழில் ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் அனு-கூலப் பலன் உண்டாகும். உற்றார் உறவினர்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கும்.

மீனம்

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். வியாபார ரீதியாக செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வதன் மூலமாக வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வேலையில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும்.




கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001