குறள் : 892

பெரியாரைப் பேணா தொழுகிற் பெரியாராற்

பேரா இடும்பை தரும்


மு.வ உரை :

ஆற்றல் மிகுந்த பெரியாரை விரும்பி மதிக்காமல் நடந்தால் அது அப் பெரியாரால் நீங்காத துன்பத்தைத் தருவதாகும்.


கலைஞர் உரை :

பெரியோர்களை மதிக்காமல் நடந்து கொண்டால் நீங்காத பெருந்துன்பத்தை அடைய நேரிடும்


சாலமன் பாப்பையா உரை :

பெரியவர்களை மதிக்காமல் நடந்தால், அப்பெரியவர்களால் தீராத துன்பம் வரும்.


Kural 892

Periyaaraip Penaadhu Ozhukir Periyaaraal

Peraa Itumpai Tharum


Explanation :

To behave without respect for the great (rulers) will make them do (us) irremediable evils.


Horoscope Today: Astrological prediction for October 04 2022


இன்றைய ராசிப்பலன் - 04.10.2022 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam

04-10-2022, புரட்டாசி 17, செவ்வாய்க்கிழமை, நவமி திதி பகல் 02.21 வரை பின்பு வளர்பிறை தசமி. உத்திராடம் நட்சத்திரம் இரவு 10.51 வரை பின்பு திருவோணம். பிரபலாரிஷ்ட யோகம் இரவு 10.51 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1/2. மஹா நவமி. சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை. பூஜைக்கு உகந்த நேரம் காலை 8.00 மணி முதல் 9.00 மணி வரை, மதியம் 12.00 மணி முதல் 01.00 மணி வரை, மாலை 04.30 மணி முதல் 05.00 மணி வரை, இரவு 07.00- மணி முதல் 08.00 மணி வரை. 

இராகு காலம் | Indraya Raagu Kalam

மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
 

இன்றைய ராசிப்பலன் - 04.10.2022 | Today rasi palan - 04.10.2022


மேஷம்

இன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நற்பலனைத் தரும். தொழில் வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

ரிஷபம்

இன்று பிள்ளைகள் மூலம் வீண் செலவுகள் செய்ய நேரிடும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் சிறு மனகசப்பு ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலையில் ஏற்படும் பணிச்சுமையை உடன் பணிபுரிபவர்கள் பகிர்ந்து கொள்வர். நண்பர்கள் ஆதரவு கிட்டும். கடன் பிரச்சினை குறையும்.

மிதுனம்

இன்று உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுபாடு தேவை. வியாபாரத்தில் பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

கடகம்

இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து முடிப்பீர்கள். வெளியூர் பயணங்களால் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உத்தியோக ரீதியாக வெளிவட்டார தொடர்பு ஏற்படும். குடும்பத்தில் புத்திர வழியில் சுபசெய்திகள் வந்து சேரும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

சிம்மம்

இன்று எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வீட்டில் பெண்கள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உற்றார் உறவினர்கள் மூலம் அனுகூலம் கிட்டும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். தடைபட்ட சுபகாரியங்கள் கைகூடும்.

கன்னி

இன்று குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறையக்கூடிய சூழ்நிலை உருவாகும். வியாபார ரீதியான பிரச்சினைகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.

துலாம்

இன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படக்கூடும். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிச்சுமை அதிகரிக்கலாம். உறவினர்கள் மூலம் உதவி கிடைக்கும். பெரிய மனிதர்களின் நட்பு தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.

விருச்சிகம்

இன்று உங்களின் பொருளாதார நிலை அமோகமாக இருக்கும். குடும்பத்தில் பிள்ளைகள் பாசமுடன் இருப்பார்கள். கணவன்- மனைவியிடையே மன ஸ்தாபங்கள் மறைந்து சந்தோஷம் கூடும். தொழிலில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். வருமானம் பெருகும். சுபகாரிய முயற்சிகளில் அ-னுகூலம் கிட்டும்.

தனுசு

இன்று உங்களுக்கு எதிர்பாராத திடீர் செலவுகள் உண்டாகும். பெரியவர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கொடுக்கல் வாங்கலில் சற்று கவனம் தேவை. வேலையில் புதிய நபர் அறிமுகம் கிட்டும். ஆரோக்கிய பாதிப்புகள் குறையும். 

மகரம்

இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலன்களை தரும். பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய மாற்றங்கள் ஏற்படும்.

கும்பம்

இன்று உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு அரசு மூலம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளால் அனுகூலம் கிட்டும்.

மீனம்

இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகி மகிழ்ச்சியை அளிக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001