ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பகிரதன் மெட்ரிக் பள்ளியில் ‘மரம் வளர்ப்போம்' என்ற வார்த்தை வடிவில் மாணவர்கள் மரக்கன்றுகளுடன் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் 91-ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு ஏ.பி.ஜே. அறக்கட்டளை மற்றும் திபிரிட்ஜ் அறக்கட்டளை சார்பில், ரத்தினகிரி பகிரதன் மெட்ரிக் பள்ளி விளையாட்டுத் திடலில் 1,000 மாணவர்கள் மரக்கன்றுகளுடன் 'மரம் வளர்ப் போம்' என்ற எழுத்து வடிவில் நின்று மரம் வளர்ப்பின் அவசியம் குறித்து வெள்ளிக்கிழமை விழிப்புணர்வு ஏற்படுத்தி, சாதனை படைத்தனர்.
இந்த சாதனை யூனிவேர்சல் ஆச் சிவேர்ஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், எதிர்கால கலாம் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகிய இரண்டு சாதனைப் புத்தகங்களில் இடம் பெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் நிறுவனர் பால முருகனடிமை சுவாமிகள் தலைமை வகித்தார். பள்ளியின் நிர்வாக அலுவலர் குருபரன், தாளாளர் கஜலட்சுமி, பள்ளி முதல்வர் தெய்வ நாயகி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், இந்தியன் செஞ்சிலுவைச் சங்கத்துணைத் தலைவர் ஜெ.லட்சுமணன், அவைத் தலைவர் கு.சரவணன், தொழிலதிபர் நல்லசாமி, மகாத்மா காந்தி அறக்கட்டளைச் செயலர் சஜன்ராஜ் ஜெயின், அப்துல்கலாம் எதிர் கால இந்தியா அறக்கட்டளை நிறுவன தலைவர் கோபிநாத், பிரஜ் அறக்கட்டளை வி.மதிவாணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.