ஆற்காடு அருகே பட்டாசு விழுந்ததில் குடிசை வீடு தீப்பிடித்து எரிந்தது.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த புதுப்பாடி அருகே உள்ள சக்கரமல்லூர் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி ஜானகி.

இந்நிலையில் நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை என்பதால் அந்த பகுதியில் உள்ளவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடிக் கொண்டிருந்தனர். அப்போது அதில் ஒரு ராக்கெட் பட்டாசு ஜானகியின் குடிசை வீடு மீது விழுந்தது. இதில் அந்த குடிசை வீடு தீப்பிடித்து மளமளவென எரிந்துள்ளது.

இதைக் கண்ட குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் தண்ணீர் மற்றும் மண்ணை வீசி எறிந்து தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் குடிசை வீட்டின் மேற்பகுதி பெருமளவு எரிந்து சேதமானது.

இதுகுறித்து தகவல்றிந்த ஆற்காடு தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.