பனப்பாக்கம் அடுத்த சிறுவளையம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவரின் 17 வயது மகள் திருத்தணி அருகே உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

சில தினங்களுக்கு முன்பு வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பவில்லை.

இதனால் அவரது 'பெற்றோர் அக்கம்பக்கத்து வீட்டிலும், உடன் வேலை செய்பவர்கள் வீட்டில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இதுகுறித்து காணாமல் போன தனது மகளை கண்டுபிடித்து தருமாறு பெற்றோர் நெமிலி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். எஸ்ஐ சிரஞ்சீவிலு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.