காவேரிப்பாக்கம் அருகே பாலாற்றில் இருந்து மக்கிலியின் கால்வாய் வழியாக வினாடிக்கு 4844 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில், பருவமழை தொடங்கும் முன்பே பல்வேறு ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இதனால், பொதுப்பணித்துறை அதிகாரிகள் முழு வீச்சில் முன்னெச்சரிக்கை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், நிரம்பாமல் உள்ள ஏரிகளையும், நிரப்புவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், வாலாஜா அணைக்கட்டு பகுதியில் இருந்து காவேரிப்பாக்கம் ஏரி, மக்கிலியன் கால்வாய் வழியாக தண்ணீர் பிரித்து அனுப்பி வைக்கப்படுகிறது.
இதனால் மக்கிலியன் கால்வாயில் வினாடிக்கு 482 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஓச்சேரி பஸ் நிறுத்தம் எதிரே கால்வாயில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.
தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள மக்கிலியன் கால்வாயில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்வதால் அருவிபோல் காட்சியளிக்கிறது. அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் அதனை ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.