ராணிப்பேட்டை அருகே கல்லூரிக்கு போகவில்லையா என தாய் கேட்டதால் மனமுடைந்த அரசு கல்லூரி மாணவி நேற்று மாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ராணிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை அடுத்த மேல்வேலம்குளத்து தெருவை சேர்ந்த பஞ்சாட்சரம் மகள் லாவண்யா (19). இவர் வாலாஜாவில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் 2ம் ஆண்டு தாவரவியல் பட்டப்படிப்பு படித்து வந்தார். இந்த நிலையில் மாணவி லாவண்யா உடல்நிலை சரியில்லாததால் கடந்த ஒரு வாரமாக கல்லூரிக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து லாவண்யாவின் தாய் நேற்று ஏன் கல்லூரிக்கு போகவில்லை என கேட்டாராம்.
இதில் மனமுடைந்த அரசு கல்லூரி மாணவி லாவண்யா நேற்று மாலை தனது துப்பட்டாவால் மின்விசிறி கொக்கியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி சப் இன்ஸ்பெக்டர் வாசு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.