வாலாஜா- சோளிங்கர் சாலையில் படவேட்டம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் அருகே உள்ள டீக்கடையில் நேற்று முன்தினம் மணி (75) உட்பட சிலர் டீ குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது சோளிங்கரில் இருந்து வேகமாக வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து திடீரென டீக்கடைக்குள் புகுந்தது.

இதில் கடையில் இருந்தவர்கள் அலறிய யடித்து ஓடினர். அதற்குள் மணி மீது கார் மோதியது. இதில் அவர் படுகாயம டைந்தார். அதேபோல் காரில் வந்த வாலிபர்கள் 2 பேரும் லேசான காயமடைந்தனர். 3 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் மணி வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார்.

தகவலறிந்த வாலாஜா போலீசார் விசாரணை நடத்தி வாலாஜா உலகளந்தர் தெருவை சேர்ந்த விஜய்(22), அவரது நண்பர் பிச்சைமுத்து (24) என்பதும் இவர்கள் குடிபோதையில் கார் ஓட்டியது விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.