Book Fair Festival-Awareness in Nemili, Panapakkam Municipalities
நெமிலி பேரூராட்சியில் செயல் அலுவலர் மனோகரன் தலைமையில் புத்தகக் கண்காட்சி குறித்து ஒலிபெருக்கி மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் உள்ள அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கல்லூரியில் இன்று புத்தக கண்காட்சி திருவிழா நடைபெற உள்ளது.
இது தொடர்பாக நெமிலி, பனப்பாக்கம் பேரூராட்சிகளில் பேரூராட்சி செயல் அலுவலர்கள் மனோகரன், குமார் ஆகியோர் தலைமையில் ஆட்டோக்களில் ஒலிபெருக்கின் உதவியுடன் பிரசார விழிப்புணர்வு மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலமாக புத்தகக் கண்காட்சி திருவிழா நடைபெறுகிறது.
இதில் பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கவிஞர்கள் சமூக ஆர்வலர்கள் உட்பட பல கலந்து கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.