Chittor Car Accident occurred after hitting an EB Iron pole on the side of the road in Navalpur, Ranipet area
ராணிப்பேட்டை மாவட்டம் நவல்பூர் பகுதியில் சென்னையில் இருந்து சித்தூர் நோக்கி அதிவேகமாக கார் சென்று கொண்டிருந்தது, நவல்பூர் அருகே கார் வந்த பொது கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் இருந்த இரும்பு மின் கம்பத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு வாலாஜாபேட்டை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிழ்ச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இரும்பபு கம்பத்தின் மீது மோதியதால் அங்கிருந்த மின் கம்பிகள் அறுந்து விழுந்தது, அதிர்ஷ்டவசமாக இச்சம்பவத்தில் யாருக்கு உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
மேலும் விபத்து தொடர்பாக ராணிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.