அரக்கோணம் அருகே குருவராஜபேட்டையில் சாலையில் பட்டாசு வெடித்தவர்களை கத்தியைக் காட்டி மிரட்டிய 4 ரௌடிகள் கைது செய்யப்பட்டனர்.
தீபாவளியன்று குருவராஜபேட்டையில் தனியார் ஏடிஎம் அருகே சாலையில் சிலர் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 4 பேர், திடீரென கத்தியைக் காட்டி அவர்களை மிரட்டியுள்ளனர்.
இது குறித்து அரக்கோணம் கிராமிய காவல் ஆய்வாளர் பழனி வேல் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி, சோகனூரைச் சேர்ந்த விக்னேஷ் (20), அம்பேத்ராஜ் (22), கன்னியப்பன் (22), சஞ்சய் (22) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து கத்தி, இரும்பு ராடு உள்ளிட்ட ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனர்.