ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பரவலான மழை பெய்தது. அதிகபட்சமாக கலவை தாலுகாவில் 17.20 மி.மீ மழை பதிவானது.
ராணிப்பேட்டை மாவட்டத்தின் பல இடங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. பெரும்பாலான ஏரிகளில் இருந்து உபரிநீர் வெளியேறி வருகிறது.

அதேபோல், கலவை தாலுகாவில் நேற்று முன் தினம் காலை மேகம் சூழ்ந்து காணப்பட்டது.

பின்னர், இரவு பரவலான மழை பெய்தது. அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் அதிகபட்சமாக கலவை தாலுகாவில் 17.20 மி.மீ மழை பதிவாகி உள்ளது. 

இதேபோல், ஆற்காடு 2.20 மி.மீ, வாலாஜா 1.00 மி.மீ, 
காவேரிப்பாக்கம் 10.00 மி.மீ, 
மழை பதிவானது.