ராணிப்பேட்டை மாவட்டத்தில் உழவர் சந்தையில் வியாபாரம் செய்யும் விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது.
தமிழக வேளாண் பட்ஜெட்டில், உழவர்சந்தைகளில் பிற்பகலிலும் வேளாண் பொருட்கள் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தற்போது உழவர் சந்தைகள் காலை 6 மணி முதல் நண்பகல் வரை இயங்கி வருகின்றன. அதனைத் தொடர்ந்து, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை உழவர்சந்தை இயங்கவுள்ளன.

மாலைநேர சந்தையில், உணவு தானியங்கள், சிறு தானியங்கள், பருப்பு வகைகள், வெல்லம், காளான், நாட்டுக்கோழி முட்டை மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் ஆகியவைகள் விற்கப்படும்.

ராணிப்பேட்டை உழவர் சந்தை மாலை நேரத்தில் இயங்கவுள்ளது. அதில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள் ராணிப்பேட்டை வேளாண்மை துணை இயக்குநரை அணுகி அடையாள அட்டை பெற்றுக்கொள்ளலாம்.

ராணிப்பேட்டை கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்விபரம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.