ராணிப்பேட்டை அஞ்சலகத்தின் வேலைவாய்ப்பு

இந்திய அஞ்சல் துறையின் கீழ் இயங்கும் அஞ்சல் ஆயுள் காப்பீடு பிரிவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

ராணிப்பேட்டை மாவட்ட அரசு வேலை வாய்ப்பு செய்திகள்


ராணிப்பேட்டையில் உள்ள அஞ்சலகத்தில் காலியாக உள்ள பணிகள் நிரப்பப்பட உள்ளன. இதுகுறித்து மத்திய அரசின் பத்திரிக்கை தகவல் அலுவகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ராணிப்பேட்டை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் வரும் வெள்ளிக்கிழமை ( 23.09.2022) நேர்முக தேர்வு நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பின் விவரம்:


அஞ்சல் ஆயுள் காப்பீடு / கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனைக்காக புதிய நேரடி முகவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். ராணிபேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த விற்பனை அனுபவம் உள்ளவர்கள் இந்த நேர் காணலில் கலந்து கொள்ளலாம். ராணிபேட்டை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் 23.09.2022 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நேர்காணல் நடைபெறும்.

தேவையான தகுதிகள்:


கல்வி தகுதி: பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18-லிருந்து 60 வரை இருக்க வேண்டும்.

சுய தொழில் செய்யும் / வேலையில்லா இளைஞர்கள், ஏதேனும் காப்பீட்டு நிறுவனத்தில் பணி புரிந்த முன்னாள் காப்பீடு ஆலோசகர்கள் / முகவர்கள், அங்கன்வாடி மற்றும் மஹிளா மண்டல் பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்.

விரும்பத்தக்கவை: 

ஆயுள் காப்பீடுகளை விற்பனை செய்வதில் முன் அனுபவம் உள்ளவர்கள், கணினிப் பயிற்சி உள்ளவர்கள் / உள்ளூரைப் பற்றி நன்கு அறிந்தவர்கள்.

ஊதியம்:


இத்தகைய முகவர்களுக்கு அஞ்சல் துறையிலிருந்து ஊதியம் வழங்கப்படமாட்டாது. முகவர்களின் செயல்பாடு அடிப்படையில் ஊக்கத்தொகை மட்டும் வழங்கப்படும்.

மேற்கண்ட தகுதியுடையவர்கள் தங்களின் தன்விவரக் குறிப்பு, வயது / கல்வி ஆதாரத்திற்கான மூலச் சான்றிதழ் காப்பீட்டுத்துறையில் அனுபவத்திற்கான சான்றிதழ் ஏதாவது இருந்தால், அதன் நகல் ஆகியவற்றுடன் நேர்காணலுக்கு வரவேண்டும் என அரக்கோணம் கோட்ட அஞ்சலகங்களின் மேற்பார்வையாளர் கே.சிவசங்கர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அறிவிப்பின் முழு விவரம் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1858956