📻 1922ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி உலகில் முதல் முறையாக வானொலியில் வர்த்தக ஒலிபரப்பு அமெரிக்காவில் ஆரம்பமானது.
🌍 1789ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி வில்லியம் ஹேர்ச்செல், சனி கோளின் புதிய சந்திரனைக் கண்டுபிடித்தார்.
🌊 1609ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி ஹென்ரி ஹட்சன், டெலவர் வளைகுடா பகுதியை கண்டுபிடித்தார்.
📰 1845ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி சயின்டிபிக் அமெரிக்கன் என்ற இதழின் முதல் பதிப்பு வெளியானது.
பிறந்த நாள் :-
அய்யன்காளி
🏁 தாழ்த்தப்பட்டோருக்கு மறுக்கப்பட்டிருந்த உரிமைகளை பெற்றுத் தந்த கேரளப் போராளி அய்யன்காளி 1863ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி திருவிதாங்கூருக்கு உட்பட்ட பெருங்காட்டுவிளா என்ற ஊரில் பிறந்தார்.
🏁 இவர் ஓய்வு இல்லாத கட்டாய உழைப்பு முறையை ஒழித்துக்கட்டும் போராட்டத்தை 1904-ல் தொடங்கினார். கேரளாவில் முதல் முறையாக நடந்த இந்த விவசாயத் தொழிலாளர் போராட்டம் வெற்றி பெற்று, 'ஞாயிற்றுக்கிழமை ஓய்வு' உள்ளிட்ட பல உரிமைகளை தொழிலாளர்களுக்குப் பெற்றுத் தந்தது.
🏁 சாதி பேதமின்றி எல்லா குழந்தைகளுக்கும் இலவசக் கல்வி அளிக்கும், தென்னிந்தியாவின் முதல் அரசுப் பள்ளிக்கூடம் இவரது முனைப்பால் தொடங்கப்பட்டது. இவர் கல்வி, அரசு வேலைவாய்ப்பு, நிலம், சமூக மரியாதை, கோவில்களில் வழிபாட்டு உரிமை ஆகியவற்றுக்காகவும் ஏராளமான போராட்டங்களை முன்னின்று நடத்தி வெற்றி பெற்றார்.
🏁 காந்தியடிகள் 1937-ல் வெங்கனூர் சென்று இவரை சந்தித்து, இவரது தொண்டுகளைப் பாராட்டி ஆசி வழங்கினார். தாகூர், சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்ட பல தலைவர்களுடன் கடிதத் தொடர்பு கொண்டிருந்தார்.
🏁 தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பல உரிமைகளைப் பெற்றுத்தந்த போராளியான அய்யன்காளி தனது 78-வது வயதில் (1941) மறைந்தார்.
ப்ராக் கோராக்புரி
✍ இந்திய எழுத்தாளர், கவிஞர், விமர்சகரான ப்ராக் கோராக்புரி 1896ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி கோரக்பூரில் பிறந்தார்.
✍ இவர் மாகாண சிவில் சேவை (P.C.S.) மற்றும் இந்திய சிவில் சேவையில் (I.C.S.) தேர்வு செய்யப்பட்டார். ஆனால் மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தை பின்பற்றுவதற்காக அதை ராஜினாமா செய்தார்.
✍ இவர் இந்தியாவின் மிக உயர்ந்த விருதான இலக்கிய விருது, ஞானபீட விருது மற்றும் 1960-ல் சாகித்திய அகாடமி விருதை பெற்றுள்ளார். இவர் 1982ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் தேதி புது தில்லியில் இறந்தார்.
இன்றைய நிகழ்வுகள்
475 – உரோமைத் தளபதி ஒரெசுடசு மேற்கு உரோமைப் பேரரசர் யூலியசு நேப்போசை தலைநகர் ராவென்னாவில் இருந்து வெளியேற்றினான்.
632 – முகம்மது நபியின் மகள் பாத்திமா இறந்தார். இவரின் இறப்பின் காரணம் சுனி, சியா முசுலிம்களிடையே சர்ச்சைக்குரிய தலைப்பாக இருந்து வருகிறது.
1521 – உதுமானியத் துருக்கிகள் பெல்கிறேட் நகரைக் கைப்பற்றினர்.
1524 – எசுப்பானியரின் குவாத்தமாலா ஆக்கிரமிப்பின் போது, காக்சிக்கல் மாயா மக்கள் தமது முன்னாள் எசுப்பானியக் கூட்டுப் படைகளை எதிர்த்துக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
1542 – துருக்கிய-போர்த்துக்கீசப் போர்: உவோஃப்லா நகரில் இடம்பெற்ற போரில், போர்த்துக்கீசப் படையினர் சிதறி ஓடினர். அவர்களது தலைவர் கிறித்தோவாவோ ட காமா கைது செய்யப்பட்டு, தூக்கிலிடப்பட்டார்.
1619 – இரண்டாம் பேர்டினண்ட் புனித உரோமைப் பேரரசராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1640 – இங்கிலாந்து மன்னர் முதலாம் சார்லசின் இராணுவம் நியூபர்ன் போரில் இசுக்கொட்டியப் படைகளிடம் தோற்றது.
1648 – இரண்டாவது ஆங்கிலேய உள்நாட்டுப் போர்: கொல்செஸ்டர் மீதான 11-கிழமை முற்றுகை நிறைவடைந்தது. அரசுப் படைகள் நாடாளுமன்றப் படைகளிடம் சரணடைந்தன.
1709 – மணிப்பூர் மன்னராக பாம்கீபா முடிசூடினார்.
1757 – முதலாவது ரூபாய் நாணயம் கல்கத்தாவில் வார்க்கப்பட்டது.[1]
1789 – சனிக் கோளின் என்சலடசு என்ற புதிய சந்திரனை வில்லியம் எர்செல் கண்டுபிடித்தார்.
1810 – கிராண்ட் போர்ட் சமரில் அரச கடற்படைக் கப்பல்கள் பிரான்சிடம் சரணடைந்தன.
1833 – ஐக்கிய இராச்சியத்தின் நான்காம் வில்லியம் மன்னர் அடிமை ஒழிப்புச் சட்டம் 1833 ஐ அங்கீகரித்தார். ஆனாலும், பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இந்திய அடிமை ஒழிப்புச் சட்டம் 1843 அமுலுக்கு வரும் வரை அடிமை முறை சட்டபூர்வமாக இருந்தது.
1844 – பிரெட்ரிக் எங்கெல்ஸ் மற்றும் கார்ல் மார்க்ஸ் இருவரும் பாரிசில் சந்தித்தனர்.
1845 – சயன்டிஃபிக் அமெரிக்கன் முதலாவது இதழ் வெளிவந்தது.
1849 – ஒரு மாதகால முற்றுகையின் பின்னர் வெனிசு ஆஸ்திரியாவிடம் வீழ்ந்தது.
1859 – 1859 சூரியப் புயல் பூமியைத் தாக்கிய அதிதீவிர புவிக்காந்தப் புயல் ஆகும். அமெரிக்கா, ஐரோப்பா முழுவதும் தொலைத்தந்திச் சேவைகள் பாதிப்படைந்தன.
1867 – ஐக்கிய அமெரிக்கா ஆளில்லா மிட்வே தீவுகளைக் கைப்பற்றியது.
1867 – நாகை மாவட்டத்தில் அமைந்திருந்த சூளாமணி புத்த விகாரத்தை இடிக்க ஆங்கிலேய அரசு உத்தரவிட்டது
1879 – சூலுக்களின் கடைசி மன்னன் செட்சுவாயோ பிரித்தானியர்களினால் சிறைப்பிடிக்கப்பட்டான்.
1898 – காலெப் பிராடம் தான் கண்டுபிடித்த மென்பானத்திற்கு பெப்சி கோலா எனப் பெயரிட்டார்.
1913 – நெதர்லாந்தின் அரசி வில்கெல்மினா டென் ஹாக் நகரில் அமைதி அரண்மனையைத் திறந்தார்.
1914 – முதலாம் உலகப் போர்: அரச கடற்படை செருமானியக் கப்பல்களை எலிகோலாந்து பெருங்குடாப் போரில் தோற்கடித்தன.
1914 – முதலாம் உலகப் போர்: செருமானியப் படைகள் பெல்சியத்தில் நாமூர் நகரைக் கைப்பற்றின.
1916 – முதலாம் உலகப் போர்: செருமனி உருமேனியா மீதும், இத்தாலி செருமனி மீது போரை ஆரம்பித்தன.
1924 – சோவியத் ஆக்கிரமிப்புக்கு எதிராக ஜோர்ஜியர்கள் கிளர்ச்சியை ஆரம்பித்தனர்.
1943 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக டென்மார்க்கில் பொது வேலை நிறுத்தம் ஆரம்பமானது. அடுத்த நாள் அங்கு இராணுவச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
1944 – இரண்டாம் உலகப் போர்: மர்சேய், துலோன் ஆகியன விடுவிக்கப்பட்டன.
1963 – மார்ட்டின் லூதர் கிங், என் கனவு யாதெனில்... என்ற புகழ்பெற்ற வார்த்தைகளுடன் சொற்பொழிவாற்றினார்.
1964 – ஐக்கிய அமெரிக்கா, பிலடெல்பியாவில் இனக்கலவரம் ஆரம்பமானது.
1968 – சிகாகோவில் சனநாயகவாதிகளின் தேசிய மாநாட்டின் போது கலவரம் வெடித்தது.
1988 – செருமனியில் வான வேடிக்கை விழா ஒன்றின் போது மூன்று விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பார்வையாளர்கள் மீது வீழ்ந்ததில் 75 பேர் கொல்லப்பட்டு 346 பேர் படுகாயமடைந்தனர்.
1990 – குவைத்தைத் தனது புதிய மாகாணமாக ஈராக் அறிவித்தது.
1990 – சுழல் காற்று அமெரிக்காவின் இலினொய் மாநில நகரங்களைத் தாக்கியதில் 29 உயிரிழந்தனர்.
1993 – கலிலியோ விண்கலம் டாக்டில் என்று பின்னர் பெயரிடப்பட்ட சந்திரன் ஒன்றைக் கண்டுபிடித்தது.
1996 – வேல்ஸ் இளவரசர் சார்லசு, இளவரசி டயானா மணமுறிவு ஏற்பட்டது.
1998 – பாக்கித்தானின் நாடாளுமன்றம் "திருக்குர்ஆன், நபிவழி" ஆகியவை "அதியுயர் சட்டம்" என அறிவித்தது. இச்சட்டமூலத்தை பாக்கித்தான் மேலவை நிராகரித்தது.
1998 – இரண்டாவது காங்கோ போர்: காங்கோ இராணுவம் அங்கோலா, சிம்பாப்வே படைகளின் உதவியுடன், கின்சாசா மீதான ருவாண்டாவின் தாக்குதலை முறியடித்தது.
2006 – திருகோணமலை, சம்பூரில் இலங்கை இராணுவம் தாக்குதல் நடத்தியதில் 20 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
2006 – இலங்கையில் பத்தாவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் முடிவடைந்தன.
2011 – ராஜீவ் காந்தி படுகொலையில் குற்றஞ்சாட்டப்பட்டோரைத் தூக்கிலிடக்கூடாது எனக் கோரி காஞ்சிபுரத்தில் செங்கொடி என்ற 21 வயது பெண் போராளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இன்றைய பிறப்புகள்
1592 – முதலாம் பக்கிங்காம் கோமகன், ஜார்ஜ் வில்லியர்சு (இ. 1628)
1749 – யொஹான் வூல்ப்காங் ஃபொன் கேத்தா, செருமானிய எழுத்தாளர், கவிஞர் (இ. 1832)
1855 – நாராயணகுரு, இந்து ஆன்மிகவாதி (இ. 1928)
1863 – அய்யன்காளி, இந்திய சாதிய எதிர்ப்பு செயற்பாட்டாளர் (இ. 1914)
1899 – ஜேம்ஸ் வாங் ஹோவ், சீன அமெரிக்க ஒளிப்பதிவாளர் (இ. 1976)
1928 – ஆர். பாலசரஸ்வதி, தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி, நடிகை
1928 – எம். ஜி. கே. மேனன், இந்திய இயல்பியலாளர் (இ. 2016)
1932 – யாகிர் அஹரோனோவ், இசுரேலியக் கல்வியாளர்
1934 – ஏ. பி. கோமளா, தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி
1949 – டப்பிங் ஜானகி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை
1957 – ஈவோ யொசிப்போவிச், குரோவாசியாவின் 3வது அரசுத்தலைவர்
1957 – ஐ வெய்வே, சீனச் சிற்பி, மனித உரிமைச் செயற்பாட்டாளர்
1959 – சுமன், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
1964 – இளவரசு, தென்னிந்திய நடிகர் , ஒளிப்பதிவாளர்
1965 – டிஸ்கோ சாந்தி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை
1965 – ஷானியா ட்வைன், கனடியப் பாடகி
1969 – ஜேக் பிளாக், அமெரிக்க நடிகர்
1977 – சில்பா சிண்டே, இந்தியத் திரைப்பட நடிகை, அரசியல்வாதி
1982 – பிரசன்னா, தமிழகத் திரைப்பட நடிகர்
1983 – லசித் மாலிங்க, இலங்கைத் துடுப்பாளர்
1986 – கிலாத் ஷாலித், இசுரேலியப் போர்வீரர், ஊடகவியலாளர்
இன்றைய இறப்புகள்
430 – ஹிப்போவின் அகஸ்டீன், அல்சீரிய மெய்யியலாளர், புனிதர் (பி. 354)
632 – பாத்திமா, முகம்மது நபியின் மகள் (பி. 605)
1891 – இராபர்ட்டு கால்டுவெல், ஆங்கிலேய மதப்பரப்புனர், மொழியியலாளர் (பி. 1814)
1945 – மயிலை சின்னத்தம்பிப் பிள்ளை ராஜா, தமிழக அரசியல்வாதி, செயற்பாட்டாளர் (பி. 1883)
1973 – முகவை கண்ண முருகனார், கவிஞர், தமிழறிஞர் (பி. 1890)
2011 – செங்கொடி, தமிழக தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர், போராளி
2012 – சுலாமித் பயர்சுடோன், கனடிய-அமெரிக்க எழுத்தாளர் (பி. 1945)
2020 – எச். வசந்தகுமார், தமிழகத் தொழிலதிபர், அரசியல்வாதி (பி. 1950)