✈ 1939ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் தேதி உலகின் முதல் ஜெட் விமானமான ஹென்கெல் ஹி 178 சேவைக்கு விடப்பட்டது.

☉ 1757ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் இந்திய நாணயம் கல்கத்தா நகரில் தயாரிக்கப்பட்டது.

📗 1955ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் கின்னஸ் புத்தகம் 198 பக்கங்களுடன் வெளியிடப்பட்டது.

✍ 1859ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் தேதி பென்சில்வேனியாவின் டிட்டுஸ்வில் என்ற இடத்தில் பெட்ரோலியம் கண்டுபிடிக்கப்பட்டது.நினைவு நாள் :-


ரோலண்ட் ஹில்

🍀 நவீன அஞ்சல் சேவையை கண்டுபிடித்த ரோலண்ட் ஹில் 1795ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி இங்கிலாந்தில் பிறந்தார். அப்பொழுது தபால்களைப் பெறுபவர்கள்தான் கட்டணத்தைச் செலுத்தும் நடைமுறை இருந்தது. இதைத்தொடர்ந்து, நாடு முழுவதும் ஒரேமாதிரியான ஃபோர் பென்னி போஸ்ட் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இங்கிலாந்து நாடாளுமன்றமும் இதற்கு ஒப்புதல் அளித்தது.

🍀 இதன்படி, பணம் கொடுத்து ஸ்டாம்ப் வாங்கி, தபாலில் ஒட்டும் பழக்கம் 1839ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. கட்டணம் செலுத்தி தபாலை பெறும் நடைமுறையை முடிவுக்கு கொண்டுவந்து, ஏழை எளியவர்களும் தபால் சேவையை பெறச் செய்தார். முதல் தபால்தலைகள் 1840ஆம் ஆண்டு விற்பனைக்கு வந்தன. ஓய்வு பெறும்வரை தபால் துறையில் பல மாற்றங்களைச் செய்த ரோலண்ட் ஹில் 1879ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் தேதி தனது 83வது வயதில் (1879) மறைந்தார்.பிறந்த நாள் :-


டி.என்.ராஜரத்தினம் பிள்ளைபிள்ளை

👉 அகில உலக நாதஸ்வர சக்ரவர்த்தி என்ற பட்டம் பெற்றவரும், இணையற்ற நாதஸ்வர வித்வானாகத் திகழ்ந்தவருமான டி.என்.ராஜரத்தினம் பிள்ளை 1898ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருமருகல் என்ற ஊரில் பிறந்தார்.

👉 இவரது முதல் நாதஸ்வர நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இவரின் இசையை ரசிகர்கள் மெய்மறந்து கேட்டனர். முதல் கச்சேரியே அபாரமான வெற்றி அடைந்தது. அதன் பின் பல இடங்களில் கச்சேரிகள் நடைபெற்றன.

👉 'நாதஸ்வர சக்ரவர்த்தி' என்று அழைக்கப்பட்ட இவர், பெயரில் மட்டுமல்லாமல் நிஜமாகவே ஒரு ராஜாவைப் போல வாழ்ந்தவர். இலங்கை, மலேசியா நாடுகளுக்கும் சென்று இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளார். 'மிஸ் கமலா', 'கவி காளமேகம்' ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

👉 'சங்கீத அகாடமி விருது', 'அகில உலக நாதஸ்வர சக்ரவர்த்தி' உள்ளிட்ட ஏராளமான பட்டங்களும் விருதுகளும் பெற்றுள்ளார். இந்தியா சுதந்திரம் அடைந்த நள்ளிரவில் டெல்லியில் நடைபெற்ற விழாவில் இவரது மங்கல இசை தான் ஒலித்தது.

👉 ஏவி.எம். செட்டியார், பல மணி நேரம் இவர் இசைத்த 'தோடி' ராகத்தைப் பதிவு செய்து ஆறரை மணி நேர இசைத்தட்டை வெளியிட்டார். இது உலகம் முழுவதும் விற்பனையாகி சாதனை படைத்தது. ஈடு இணையற்ற நாதஸ்வரக் கலைஞர் என்று போற்றப்பட்ட டி.என். ராஜரத்தினம் பிள்ளை 1956-ல் 58-ம் வயதில் மறைந்தார்.


இன்றைய நிகழ்வுகள் 


410 – விசிகோத்துகளின் உரோமை மீதான மூன்று நாள் முற்றுகை முடிவுற்றது.

1172 – இங்கிலாந்து மன்னர் இரண்டாம் என்றி தனது வாரிசுகளாக என்றி (இளம் மன்னர்), பிரான்சின் மார்கரெட் ஆகியோருக்கு முடி சூடினார், ஆனாலும் அவர்களுக்கு எவ்வித அதிகாரமும் வழங்கவில்லை.

1593 – பிரான்சு மன்னர் நான்காம் என்றியைப் படுகொலை செய்ய பியேர் பாரியர் என்பவன் எடுத்த முயற்சி வெற்றி பெறவில்லை.

1664 – பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனி நிறுவப்பட்டது.

1689 – உருசியாவுக்கும் சீனாவின் சிங் பேரரசுக்கும் இடையில் நெர்ச்சின்ஸ்க் உடன்பாடு எட்டப்பட்டது.

1776 – லோங் தீவுச் சண்டை: இன்று புரூக்ளின் என அழைக்கப்படும் இடத்தில் பிரித்தானியப் படைகள் சியார்ச் வாசிங்டன் தலைமையிலான அமெரிக்கப் படைகளைத் தோற்கடித்தன.

1781 – இரண்டாவது ஆங்கிலேய மைசூர் போர்: பொள்ளிலூர் போர் (1781): ஐதர் அலி தலைமையில் மைசூர் அரசுப் படைகளுக்கும் ஜெனரல் ஐயிர் கூட் தலைமையில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனப் படைகளுக்கும் இடையே காஞ்சிபுரம் அடுத்த பொள்ளிலூரில் போர் இடம்பெற்றது. 2,000 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

1793 – பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: துலோன் நகரம் பிரெஞ்சுப் குடியரசுக்கு எதிராகக் கிளர்ச்சியில் இறங்கியது. பிரித்தானிய, எசுப்பானியப் படைகளைத் தனது துறைமுகத்தில் இறங்க அனுமதித்தது. இதன் விளைவாக பிரெஞ்சு புரட்சிப் படைகள் துலோனைக் கைப்பற்றின.

1810 – நெப்போலியப் போர்கள்: பிரெஞ்சுக் கடற்படை பிரித்தானிய அரச கடற்படையைத் தோற்கடித்தது. இதன் மூலம் பிரெஞ்சுத் தீவில் கிராண்ன் போர்ட் துறைமுகத்தை பிரித்தானியா கைப்பற்றுவதை முறியடித்தது.

1813 – பிரெஞ்சுப் பேரரசன் முதலாம் நெப்போலியன் ஆத்திரிய, உருசிய, புருசியப் பெரும் படைகளை திரெஸ்டன் சமரில் வென்றான்.

1828 – பிரேசிலுக்கும் அர்கெந்தீனாவுக்கும் இடையில் இடம்பெற்ற சமரசப் பேச்சுக்களில் உருகுவை தனிநாடாக அறிவிக்கப்பட்டது.

1832 – அமெரிக்காவின் சவுக் பழங்குடித் தலைவர் பிளாக் ஹாக் அமெரிக்க அதிகாரிகளிடம் சரணடைந்தார். பிளாக் ஹாக் போர் முடிவுக்கு வந்தது.

1859 – அமெரிக்காவில் பென்சில்வேனியா மாநிலத்தில் பாறை எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவே உலகில் வணிகத்துக்காக வெற்றிகரமாகத் தோண்டப்பட்ட முதலாவது எண்ணெய்க் கிணறு ஆகும்.

1881 – அமெரிக்காவில் புளோரிடா மாநிலத்தில் இடம்பெற்ற ஜியார்ஜியா சூறாவளியினால் 700 பேர் வரையில் இறந்தனர்.

1883 – இந்தோனேசியாவில் கிரக்கத்தோவா எரிமலைத் தீவு வெடித்ததினால் உருவாகிய ஆழிப்பேரலையினால் ஜாவா, சுமாத்திரா தீவுகளில் பல இடங்கள் அழிந்தன. கிட்டத்தட்ட 36,417 பேர் உயிரிழந்தனர். சுற்றுச்சூழலில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

1893 – ஐக்கிய அமெரிக்காவில் கடல் தீவுகளில் இடம்பெற்ற சூறாவளியில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

1896 – ஆங்கிலேய-சன்சிபார் போர்: ஐக்கிய இராச்சியத்துக்கும் சான்சிபாருக்கும் இடையில் இடம்பெற்ற போர் உலகின் மிககுறைந்த நேரத்தில் (09:02 - 09:40) நிகழ்ந்து முடிந்த போராகும்.

1916 – முதலாம் உலகப் போர்: உருமேனியா ஆத்திரியா-அங்கேரியுடன் போரை அறிவித்தது.

1928 – போரை சட்டவிரோதமாக்கும் கெலொக்-பிறையண்டு உடன்படிக்கையில் 15 நாடுகள் கையெழுத்திட்டன. மொத்தமாக 61 நாடுகள் இதில் பின்னர் கையெழுத்திட்டன.

1933 – ஆபிரிக்கான மொழியில் விவிலியம் முதல்தடவையாக மொழிபெயர்க்கப்பட்டது. தென்னாப்பிரிக்காவின் புளும்பொன்டின் நகரில் இடம்பெற்ற விவிலிய விழாவில் இது அறிமுகமானது.

1939 – உலகின் முதலாவது ஜெட் விமானம் சேவைக்கு விடப்பட்டது.

1942 – உக்ரைனில் சார்னி என்ற இடத்தில் யூதர்கள் படுகொலை ஆரம்பமானது. இரண்டு நாள் தாக்குதல்கலில் 14,000 முதல் 18,000 யூதரக்ள் கொல்லப்பட்டனர்.

1943 – இரண்டாம் உலகப் போர்: சப்பானியப் படைகள் சொலமன் தீவுகளில் ஒன்றான நியூ ஜோர்ஜியா தீவில் இருந்து வெளியேறினர்.

1943 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி ஜெர்மனியின் வான் சண்டைப் படை கிரீட் நகரில் வொரிசியா கிராமத்தைக் குண்டு வீசி அழித்தது.

1952 – லக்சம்பேர்க்கில் மேற்கு செருமனிக்கும் இசுரேலுக்கும் இடையில் போர் நட்டஈடு தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டது. இதன்படி செருமனி 3 பில்லியன் டொச்சு மார்க்கை நட்டஈடாகச் செலுத்த ஒப்புக் கொண்டது.

1956 – உலகின் முதலாவது வணிக-ரீதியாக மின்சாரம் உற்பத்தி செய்யும் அணு மின் நிலையம் ஐக்கிய இராச்சியத்தில் கால்டர் ஹால் என்ற இடத்தில் நிறுவப்பட்டது.

1957 – மலேசியாவின் அரசியலமைப்பு சாசனம் அமுலானது.

1962 – நாசா மரைனர் 2 விண்கலத்தை வீனசு கோளை நோக்கி ஏவியது.

1971 – ஆப்பிரிக்காவின் சாட் நாட்டில் இடம்பெற்ற இராணுவப் புரட்சி தோல்வியடைந்தது. சாட் அரசு எகிப்து மீது குற்றம் சாட்டியது.

1975 – போர்த்துக்கீசத் திமோரின் ஆளுநர் அதன் தலைநகர் டிலியைக் கிளர்ச்சியாளர்களிடம் கைவிட்டு அட்டாவுரோ தீவுக்குத் தப்பி ஓடினார்.

1979 – அயர்லாந்தில் விடுமுறையைக் கழித்துக் கொண்டிருந்த மவுண்ட்பேட்டன் பிரபுவும் மற்றும் மூவரும் ஐரியக் குடியரசுப் படையின் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டனர். மேலுமொரு குண்டுவெடிப்பில் வட அயர்லாந்தில் 18 பிரித்தானியப் படையினர் கொல்லப்பட்டனர்.

1982 – துருக்கிய இராணுவ தூதர் அட்டில்லா அல்டிகாட் கனடாவின் ஒட்டாவாவில் சுட்டுக் கொல்லப்பட்டார். 1915ம் ஆண்டில் 1.5 மில்லியன் ஆர்மீனியர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு பழிவாங்கவென இத்தாக்குதலை நடத்தியதாக ஆர்மீனிய தீவிரவாதக் குழு இதற்கு உரிமை கோரியது.

1985 – நைஜீரியாவில் நிகழ்ந்த இராணுவப் புரட்சியில் அந்நாட்டு அரசு கவிழ்க்கப்பட்டது.

1991 – எசுத்தோனியா, லாத்வியா, லித்துவேனியா ஆகிய பால்ட்டிக் நாடுகளை ஐரோப்பிய ஒன்றியம் அங்கீகரித்தது.

1991 – சோவியத் ஒன்றியத்தில் இருந்து மல்தோவா பிரிந்து தனிநாடாகியது.

2003 – செவ்வாய்க் கோள் பூமிக்கு மிகக் கிட்டவாக (55,758,006 கிலோமீட்டர் தூரத்துக்கு) கிட்டத்தட்ட 60,000 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்தது.

2003 – வட கொரியாவின் அணுவாயுதத் திட்டத்திற்கு அமைதி வழியில் தீர்வு காணும் பொருட்டு தெற்கு மற்று வட கொரியா, அமெரிக்கா, சீனா, சப்பான், உருசியா ஆகிய ஆறு நாடுகள் முதல் கட்டப் பேச்சுக்களில் ஈடுபட்டன.

2006 – அமெரிக்காவின் கென்டக்கியில் புளூகிராஸ் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட கொம்ஏர் விமானம் சிறிது நேரத்தில் தரையில் வீழ்ந்து நொருங்கியதில் 50 பேரில் 49 பேர் உயிரிழந்தனர்.

2009 – பர்மாவின் கோக்காங் சிறப்புப் பிராந்தியத்தில் பர்மிய இராணுவத்துக்கும் உள்ளூர் இராணுவத்துக்கும் இடையில் மூன்று நாள் சமர் இடம்பெற்றது.

2011 – ஐரீன் சூறாவளி அமெரிக்காவின் கிழக்குக் கரையைத் தாக்கியதில் 47 பேர் உயிரிழந்தனர்.

இன்றைய பிறப்புகள்


865 – முகம்மது இப்னு சக்கரியா அல்-ராசி, பாரசீகப் பல்துறை அறிஞர் (இ. 925)

1759 – எட்டாம் சாமராச உடையார், மைசூர் மன்னர் (இ. 1776)

1770 – எகல், செருமானிய மெய்யியலாளர் (இ. 1831)

1859 – தோரப்ஜி டாடா, இந்தியத் தொழிலதிபர் (இ. 1932)

1908 – எம். எம். தண்டபாணி தேசிகர், கருநாடக, தமிழிசைப் பாடகர், நடிகர்

1908 – டான் பிராட்மன், ஆத்திரேலியத் துடுப்பாளர் (இ. 2001)

1908 – லின்டன் பி. ஜான்சன், அமெரிக்காவின் 36-வது அரசுத்தலைவர் (இ. 1973)

1912 – சோ. சிவபாதசுந்தரம், இலங்கை வானொலி, பிபிசி தமிழ் ஒலிபரப்பாளர் (இ. 2000)

1916 – ந. சுப்பு ரெட்டியார், தமிழறிஞர், எழுத்தாளர் (இ. 2006)

1939 – டி. ஏ. கே. இலக்குமணன், தமிழக அரசியல்வாதி

1963 – சுமலதா, இந்தியத் திரைப்பட நடிகை

1972 – தி க்ரேட் காளீ, இந்திய தொழில்முறை மற்போர் வீரர், நடிகர்

1973 – மாலதி லட்சுமணன், தமிழ்த் திரைப்பட பின்னணிப் பாடகி

1974 – முகம்மது யூசுப், பாக்கித்தானியத் துடுப்பாளர்

1976 – அவுத்ரி தெல்சாந்தி, பிரெஞ்சு வானியலாளர், உயிரியலாளர்

1979 – ஆரோன் பவுல், அமெரிக்க நடிகர்

1988 – அலெக்சா வேகா, அமெரிக்க நடிகை, பாடகி

இன்றைய இறப்புகள்


827 – இரண்டாம் யூஜின் (திருத்தந்தை)

1879 – ரோலண்ட் ஹில், நவீன அஞ்சல் சேவையைக் கண்டுபிடித்தவர் (பி. 1795)

1914 – ஆய்கென் வொன் பொம் போவர்க், ஆத்திரிய பொருளியலாளர், மார்க்சிய விமர்சகர் (பி. 1851)

1929 – எர்மன் போட்டோச்னிக், குரோவாசிய-ஆத்திரியப் பொறியியலாளர் (பி. 1892)

1956 – பெலகேயா பெதரோவ்னா சாய்ன், உருசிய வானியலாளர் (பி. 1894)

1958 – எர்னஸ்ட் லாரன்சு, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1901)

1963 – என். ஆர். இராசவரோதயம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1908)

1963 – டபிள்யூ. இ. பி. டுபோய்ஸ், அமெரிக்க வரலாற்றாளர், சமூகவியலாளர் (பி. 1868)

1965 – லெ கொபூசியே, சுவிட்சர்லாந்து-பிரான்சியக் கட்டிடக் கலைஞர் (பி. 1887)

1975 – முதலாம் ஹைலி செலாசி, எத்தியோப்பியப் பேரரசர் (பி. 1892)

1976 – காஜி நஸ்ருல் இஸ்லாம், வங்காளக் கவிஞர் (பி. 1899)

1976 – முக்கேஷ், இந்தியப் பின்னணிப் பாடகர் (பி. 1923)

1979 – மவுண்ட்பேட்டன் பிரபு, இந்தியாவின் 44வது தலைமை ஆளுநர் (பி. 1900)

1980 – தெ. பொ. மீனாட்சிசுந்தரம், பன்மொழிப்புலவர், தமிழறிஞர் (பி. 1901)

2002 – அ. ச. ஞானசம்பந்தன், தமிழறிஞர், எழுத்தாளர், இலக்கிய விமர்சகர் (பி. 1916)

2003 – ரா. கி. சின்ஹா, இந்திய ஆங்கில இலக்கிய அறிஞர் (பி. 1917

2006 – இருசிகேசு முகர்ச்சி, இந்தியத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் (பி. 1922)

2012 – நிவ்விலி அலெக்சாண்டர், தென்னாப்பிரிக்க மொழியியலாளர் (பி. 1936)

2014 – விக்டர் இசுடெங்கர், அமெரிக்க இயற்பியலாளர், இறைமறுப்பாளர் (பி. 1935)

2015 – சாந்தி சச்சிதானந்தம், இலங்கைத் தமிழ் சமூக ஆர்வலர், மனித உரிமைச் செயற்பாட்டாளர் (பி. 1958)

இன்றைய சிறப்பு நாள்


விடுதலை நாள் - (மல்தோவா, சோவியத் ஒன்றியத்திடம் இருந்து, 1991)

திரைப்பட நாள் (உருசியா)