திருவலம் அடுத்த கெம்பராஜபுரம் மற்றும் பொன்னை அடுத்த கீரைசாத்து கிராமங்களில் ஆண்டுக்கு ஒரு முறை நள்ளிரவில் பூக்கும் பிரம்ம கமலம் பூ பூத்தது. இதனை அப்பகுதியினர் பார்த்து சென்றனர்.
திருவலம் பேரூராட்சிக்குட்பட்ட கெம்பராஜபுரம் கிராமம் ஏகாம்பர கவுண்டர் தெருவை சேர்ந்தவர் பாபு சாந்தி தம்பதி விவசாய குடும்பத்தினர். இவர்களது வீட்டின் பின்புறம் பல்வேறு பூச்செடிகள், வெற்றிலை கொடி, மா செடிகளை வைத்து பராமரித்து வருகின்றனர். அதேபோல் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரம்மகமலம் செடியை வைத்து பராமரித்து வந்தனர். இதில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் பூ செடியில் நேற்று முன்தினம் பூ பூத்தது.
இதையடுத்து நேற்று அதிகாலை வீட்டில் இருந்தவர்கள் பார்த்து அப்பகுதியில் வசிக்கும் சுற்றுப்புற வாசிகளுக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அப்பகுதியினர் பிரம்ம கமலம் பூவை வியப்புடன் பார்த்து சென்றனர். மேலும் இப்பூவினை பார்ப்பதால் வாழ்வின் பல்வேறு நற்சம்பவங்கள் நடக்கும் என்பது பொது மக்களின் நம்பிக்கையாக ராணுவ வீரர் குமார் ஐயர்(60). இவரது மனைவி ஸ்ரீலதா(50) தம்பதியர் வீட்டில் பிரம்ம கமலம் செடியை கடந்த 3 ஆண்டுகளாக வைத்து பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் ராணுவ வீரர்குமார் ஐயர் வீட்டில் வைத்துள்ள செடியில் நேற்று முன்தினம் இரவு பிரம்ம கமலம் பூ பூத்தது. இதுகுறித்த தகவல் அப்பகுதியில் பரவியதால் இப்பகுதி பொதுமக்கள் மற்றும் ஆன்மிகவாதிகள் பிரம்ம கமலம் பூவை பார்த்து சென்றனர்.