பிரபல இயக்குநர் பாரதிராஜா கடந்த 23ஆம் தேதி திடீரென நீர்சத்து குறைபாடு காரணமாக சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
குறிப்பாக வயது முதிர்வு மற்றும் அண்மையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் கொரோனாவுக்கு பிந்தைய அறிகுறிகளான மூச்சு விடுதல் மற்றும் உடல் சார்ந்த சில பாதிப்புகளுக்கு அவர் ஆளானார். தொடர்ந்து அதற்கான சிகிச்சையும் மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
பாரதிராஜாவை மருத்துவமனையில் சந்தித்த வைரமுத்து அவர் நலமுடன் இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார்.