A full-length bronze statue for the Maruthu brothers in Guindy, Chennai!

சென்னை கிண்டியில் உள்ள மண்டபத்தில் மருது சகோதரர்களுக்கு முழு உருவ வெண்கலச் சிலை நிறுவப்பட உள்ளது. இதற்கான டெண்டர் அறிவிப்பை பொதுப் பணித்துறை வெளியிட்டுள்ளது.

சுதந்திர போராட்ட வீரர்கள், தியாகிகள் உள்ளிட் டோரை நினைவுபடுத்தும் விதமாக தமிழகத்தில் பல் வேறு மாவட்டங்களில் ஒரு கோடி ரூபாய் செலவில் அவர்களுக்கு சிலைகள் வைக்கப்படும் என சட்டப் பேரவையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் சாமிநாதன் அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் சின்ன மருது, பெரிய மருது ஆகிய இருவருக்கும் முழு உருவ வெண்கல சிலைகள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளது. 

கிண்டியில் சிலை நிறுவுவதற்கான ஒப்பந்த புள்ளிகளை தமிழக அரசின் பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது.

அதில் மூன்று மாதங்களுக்குள்ளாக சிலையை நிறுவி முடிக்க வேண்டும் எனவும், இதற்காக 34 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப் பட்டிருப்பதாகவும் தெரிவிக் கப்பட்டுள்ளது.

மூன்று மாதங்களுக்கு உள்ளாக சிலையை நிறுவி முடிக்கும் பட்சத்தில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், மருது சகோதரர்களின் வெண்கல சிலையை திறந்துவைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.