Police flag parade in Walaja on the occasion of Vinayagar Chaturthi festival
விநாயகர் சதுர்த்தி விழா நாளை கோலாகல மாக கொண்டாடப்பட உள்ளது.
இதையொட்டி, இந்து முன்னணி, பாஜ மற்றும் பல்வேறு அமைப்புகள், விழாக்குழுவினர் சார்பில் ஆங்காங்கே விநாயகர் சிலைகள் அமைக்க ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
மேலும், போலீசார் சார்பில் விரிவான பாது காப்பு ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இந்நிலையில், பொது மக்கள் அச்சமின்றி இருக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யவும், வாலாஜா நகரில் நேற்று போலீ சார் சார்பில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது.
இந்த ஊர்வலத்தில் எஸ்பி தீபா சத்யன் தலைமையில் ஏடி எஸ்பி விஸ்வேஸ்வரன், டிஎஸ்பி பிரபு, ஆயுதப்படை மற்றும் ராணிப்பேட்டை காவல் உட்கோட்டத்தை சேர்ந்த 145 போலீசார் கலந்து கொண்டனர்.
அங்குள்ள ஜயப்பன் கோயிலில் இருந்து தொடங்கிய வகுப்பு ஊர்வலம் அணி வாலாஜா நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று, மகாத்மா காந்தி பூங்கா அருகே நிறைவடைந்தது.