Forest Department investigates recovery of leopard carcass in agricultural land near Peranampatu

வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் வனச்சரகம் ஆந்திரமாநிலம் கவுண்டன்யா வனச்சரணாலயத்தை ஒட்டி அமைந்துள்ளது. இதில் யானைகளும், சிறுத்தைகளும் அடிக்கடி குடியாத்தம் வனச்சரகம் பேரணாம்பட்டு வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள கிராமங்களில் நுழைந்து விவசாய நிலங்களை பாழ்படுத்துவதுடன், கால்நடைகளையும் அடித்து கொல்லும் சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில் குடியாத்தம் வனச்சரகம் பேரணாம்பட்டு வனப்பகுதியை ஒட்டியுள்ள சாரங்கல் கிராமத்தை சேர்ந்த துரைசாமி என்பவரது விவசாய நிலத்தில் நேற்று இரவு சிறுத்தை ஒன்று மர்மமான முறையில் இறந்த நிலையில் கிடந்தது.

இது தொடர்பாக தகவல் அறிந்து விரைந்து வந்த வனத்துறையினர் சிறுத்தை விவசாய நிலத்தில் இறந்து கிடந்தது குறித்து விசாரணை நடத்தினர். மேலும் கால்நடை மருத்துவர்களும் சடலத்தை இன்று பிரேத பரிசோதனை மேற்கொள்கின்றனர்.