Ex-students meet at government school near Arakkonam
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த மின்னல் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 1984-85ம் கல்வியாண்டில் 10 வகுப்பு படித்த மாணவ, மாணவியர் தற்போது சந்தித்து கலந்துரையாடிய நிகழ்ச்சி நேற்று பள்ளி வளாகத்தில் நடை பெற்றது.
அப்போது பள்ளி மாணவர்களின் நாடகம், பரத நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தது. மேலும் ஓய்வு பெற்ற ஆசிரியர்களை அழைத்து அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. அப்போது பேசிய முன்னாள் மாணவர்கள் வருடந்தோறும் இந்த பள்ளியில் படித்து பொதுத் தேர்வில் முதல் மூன்று இடம் பிடிக்கும் மாணவர்களுக்கு விழா நடத்தி ரொக்கப் பரிசு வழங்கப்படும். இந்தப் பள்ளிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தரப்படும் என்று பேசினர்.
இதில் 100க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.