Youngsters who have passed 8th standard can apply to start self employment

ராணிப்பேட்டை மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சுயதொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டில் (2022– 2023) வியாபார நிறுவனங்கள் உருவாக்க 17 நபர்களுக்கு வங்கிகள் மூலமாக கடன் வழங்க ரூ.14 லட்சம் நிதி ஒதுக் கீடு செய்யப்பட்டுள்ளது.

வியாபார தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்கள் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது 18 முதல் 35வரை இருக்கலாம். சிறப்பு பிரிவினருக்கு வயதில் 10 ஆண்டுகள் தளர்வு உண்டு. திட்ட மதிப்பீடு ரூ.5 லட்சங்களுக்குள் இருக்க வேண்டும். தொழில் முதலீடாக பொதுப்பிரிவினர் 10 சதவீதம், சிறப்பு பிரிவினர் 5 சதவீதம் செய்ய வேண்டும். மானியம் 25 சதவீதம் அல்லது அதிக பட்சம் ரூ.1.25 லட்சமாகும்.

விண்ணப்பங்களை https://www.msmeonline.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக ஆதார் அட்டை, புகைப்படம், கல்வித்தகுதி சான்று, கல்வி மாற்று சான்று,  புள்ளி விவரம், திட்ட அறிக்கை ஆகியன பதி வேற்றம் செய்யப்பட வேண்டும். திட்டங்களில் சிறப்பு பிரிவினருக்கான கூடுதல் சலுகைகள் அனு மதிக்கப்பட்டுள்ளது.

மேலும், கூடுதல் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம்,எண். 5, தேவராஜ் நகர், ஐவிபிஎம் எதிரில், ராணிப்பேட்டை என்ற முகவரியில் நேரிலோ அல்லது 04172-270111 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பயனடையுமாறு கெலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரி வித்துள்ளார்.