ஆற்காடு அடுத்த மேல் விசாரம், ஹாஜிபேட்டை முதல் தெருவை சேர்ந்தவர் அலிமா (20).

இவருக்கும் மேல்விசாரம், ஹாஜி பேட்டை முதல் தெருவை சேர்ந்த ஜாபர் அலிக்கும்(23) கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந் தது. அலிமா மார்ச் 31ஆம் தேதி இறந்துவிட்டார். அவர் சாவில் சந்தேகம் உள்ளது என அண்ணன் காதர்பாஷா கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி ராணிப்பேட்டை’ எஸ்பி அலுவலகத்தில் புகார் செய்தார்.

இந்நிலையில் ராணிப்பேட்டை ஆர்டிஓ பூங்கொடி விசாரணையில் அலிமாவை கணவர் ஜாபர் அலி வரதட்சணை கேட்டு கொடுமை செய்தது தெரியவந்தது. இதனால் மனமுடைந்த அலிமா தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

ஜாபர் அலியை ஆற்காடு டவுன் போலீசார் நேற்று கைது செய்தனர்.