தக்காளி காய்ச்சல் என்பது இந்தியாவில் பொதுவான கண்டறியப்படாத காய்ச்சலாகும், இந்தக் காய்ச்சலுக்கும் தக்காளிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது 

தக்காளி காய்ச்சல் என்றால் என்ன?

இது ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை அதிகம் பாதிக்கும். இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சொறி மற்றும் தோல் எரிச்சல் மற்றும் நீரிழப்பு ஆகியவற்றை ஏற்படும். மேற்புற தோலில் சிவப்பு நிறத்தில் தக்காளியைப் போன்ற கொப்புளத்தை ஏற்படுத்துகிறது. அதிக காய்ச்சல், உடல் வலி, சோர்வு, கைகள் மற்றும் கால்களில் நிற மாற்றம்,மூட்டு வலி, வாய் எரிச்சல், உணவை உட்கொள்ள முடியாத சூழல் போன்றவை தான் முக்கிய அறிகுறிகள் ஆகும். இந்தக் காய்ச்சல் இப்போது கேரளாவில் அதிகமாக பரவி கொண்டு வருகிறது.

கேரளாவில் கொல்லம், நெடுவத்தூர், அஞ்சல், ஆரியங்காவு ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கொல்லத்தில் மட்டும் 82 பேர் இந்த ‘தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர், தமிழகத்தில் நோய் வர வாய்ப்பில்லை என்றும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது அதனால் அச்சம் வேண்டாம்.