உடல் எடை கூட (Weight gain) என்ன செய்யலாம் ?

உடல் எடையை அதிகரிக்க உதவும் சில உணவுக் குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை பயன்படுத்தி எவ்வாறு உடல் எடையை அதிகரிக்கலாம் என இப்பகுதியில் காண்போம்.

பாலுடன் தேனை கலந்து இரவில் குடித்து வர உடல் எடையை அதிகரிக்கும்.

பாலையும் பேரீச்சம்பழத்தையும் கலந்து சாப்பிட்டு வரலாம்.

வாழைப் பழத்தை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

உலர் திராட்சை ,பாதம் பருப்பு, நிலக்கடலை, முந்திரி போன்றவற்றை அடிக்கடி உணவில் எடுத்து கொள்ளவும். இது உடல் எடை கூட உதவும்.

எள்ளை உணவில் அடிக்கடி சேர்த்து வரவும். இதனை பல்வேறு வழிகளில் சேர்த்துக் கொள்ளலாம். குறிப்பாக எள்ளையும் வெல்லத்தையும் பொடியாக்கி கலந்து சாப்பிட்டு வர உடல் எடை கூடும்.

முளைகட்டிய பயறுவகைகளை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளவும். குறிப்பாக கொண்டை கடலை, பாசி பயறு போன்றவை.

வெந்தயத்தை இளநீரில் நன்கு ஊறவைத்து விடியற்காலை சாப்பிட்டு வர இழந்த எடை அதிகரிக்கும்.

முட்டை, மீன்கள், மாட்டிறைச்சி, உருளை கிழங்கு போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளவும்.

நல்ல கொழுப்புகள், வைட்டமின் A, வைட்டமின் C, ஒமேகா சத்துக்கள், புரதச்சத்துக்கள், இரும்புச்சத்துக்கள் அதிகம் உள்ள உணவுப்பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.

முறையாக உடற்பயிற்சியினை மேற்கொள்ளவும். 

மன அழுத்தமின்றி வாழுங்கள்.

மேலே கூறியவற்றை முறையாக மேற்கொண்டு உடல் எடையை அதிகரித்து ஆரோகியமான வாழ்வோம்.